கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

Written By:

"ஏதேனும் சில விஷயங்கள் உங்களுக்கு சவால் தராவிடில், உங்களிடம் மாற்றங்களே ஏற்படாது," என்ற ஒரு பொன்மொழியை உதிர்த்துவிட்டு, எமது பண்டிகை கால கொண்டாட்ட சவாலை ஏற்றுக்கொண்டு இந்தியாவின் பாரம்பரிய பண்டிகைகளை கண்டு ரசிக்க முடிவு செய்தார் எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா.

திட்டமிட்டபடி, முதலாவதாக கொல்கத்தாவில் நடைபெறும் துர்காபூஜை கொண்டாட்டங்களை காண்பதற்கு திட்டமிட்டார். எனது பண்டிகை கொண்டாட்ட சவாலை ஜோபோ கொல்கத்தாவில் இருந்து துவங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, மேற்குவங்கத்திற்கு தலைநகராக மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சார தலைநகராகவும் கொல்கத்தா புகழப்படுகிறது.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

காளியின் பெயரால் வழங்கப்படும் கொல்கத்தா பாரம்பரிய விழாக்களை கொண்டாடுவதிலும், போற்றுவதிலும் பிற நகரங்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது. கடந்த 7ந் தேதி ஜோபோ குருவில்லா கொல்கத்தா புறப்பட்டார். அவருடன் எமது ஆங்கில செய்திப் பிரிவின் உதவி ஆசிரியர் ராஜ்கமல், புகைப்பட நிபுணர் அபிஜித் ஆகியோரும் உடன் சென்றனர்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

ஜோபோ குருவில்லாவுக்கு YMCA அமைப்பில் உறுப்பினர் அட்டை இருந்ததால், பயணத்திற்கு சில நாட்களுக்கு முன் அங்கு அறை முன்பதிவு செய்தாகிவிட்டது. ஏனெனில், உலகின் மிக பழமையான அமைப்பாக செயல்பட்டு வரும் YMCAவின் விடுதிகள் பெரும்பாலும் நகரின் மையப்பகுதியில் இருக்கும்.

Flickr/ Seaview99

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

எனவே, கொல்கத்தாவில் நடைபெறும் துர்காபூஜைக்காக அமைக்கப்பட்டிருக்கும் பந்தல்களையும், நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்க செல்வதற்கு இதுதான் வசதியாக இருக்கும் என்பது ஜோபோவின் கூற்று. அதேபோன்று, விமான நிலையத்தில் இருந்து நேராக YMCA விடுதிக்கு சென்றடைந்தனர் ஜோபோ அண்ட் கோ.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

எதிர்பார்த்தது போலவே பாரம்பரிய கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் மிக பழமையான கட்டடமாக காட்சி தந்தது கொல்கத்தா YMCA கட்டடம். 1857ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடமானது, ஆசியாவிலேயே மிக பழமையான கட்டங்களில் ஒன்று. இதேபோன்று நூற்றாண்டுகளை கடந்த பல கட்டங்களை அங்கு ஏராளம்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

அதற்கு முக்கிய காரணம், ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ததற்கு கொல்கத்தாவே மையமாக இருந்தது. 1911ம் ஆண்டு டெல்லியை தலைநகரமாக மாற்றும் வரை கொல்கத்தாவையே ஆங்கிலேயர்கள் தலைநகராக வைத்திருந்தனர்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

சரி, விஷயத்திற்கு வருவோம். ஏற்கனவே, சொன்னது போல துர்காபூஜை கொண்டாட்டங்களின்போது கொல்கத்தா நகரே கூட்ட நெரிசலால் விழி பிதுங்கும். டாக்சி கிடைப்பதும், கிடைத்தாலும் சர்ஜ் பிரைஸ் என்ற பெயரில் போட்டு தாளித்து விடுவார்கள் என்பதும் அறிந்த அனுபவ உண்மை.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

இதற்காக, ஏற்கனவே கூறியதுபோல ஜோபோ மற்றும் எமது குழுவினர் செல்வதற்கு இருசக்கர வாகனமே சிறந்ததாக இருக்கும். அதாவது, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் செல்வதற்கும் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரே சரியான தீர்வாக கருதினோம்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

அதன்படி, ஏற்கனவே இரண்டு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களை எமது குழுவினருக்கு ஏற்பாடு செய்திருந்தோம். சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மறுநாள் காலை துர்காபூஜை பந்தல்களுக்கு செல்ல திட்டம்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

எமது அலுவலகத்தில் பணிபுரியும் கொல்கத்தாவை சேர்ந்த நண்பர் மற்றும் கூகுள் ஆண்டவர் உதவியுடன் கொல்கத்தாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பிரபலமான துர்காதேவி பந்தல்கள் குறித்த விபரங்களை ஜோபோ அன்ட் கோ பெற்றனர். அதன்படி, கீழே உள்ள துர்காபூஜை பந்தல்களுக்கு செல்ல திட்டமிட்டனர்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

தெற்கு கொல்கத்தா பகுதியில் கரியாஹட்டில் உள்ள எக்தாலியா எவர்கிரீன், சிங்கி பார்க், ரிச்சி ரோடில் உள்ள மேடோக்ஸ் சதுக்கம் உள்பட 10 துர்காதேவி பூஜை பந்தல்களை காண்பது திட்டம்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

மத்திய கொல்கத்தாவில் காலேஜ் சதுக்கம், லெபூட்லா பார்க் உள்ளிட்ட பந்தல்களையும், வடக்கு கொல்கத்தாவில் குமர்துலி பார்க், தருண் சங்கா பகுதியில் உள்ள பந்தல்களையும், கிழக்கு கொல்கத்தாவில் சால்ட் லேக் பகுதியில் உள்ள துர்காதேவிக்கான பந்தல்களையும் பார்க்க முடிவு செய்தனர்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

மறுநாள் காலை YMCA விடுதியில் வழங்கப்பட்ட காம்ப்ளீமென்டரி English Breakfast I என்ற விசேஷமான காலை உணவை ஜோபோ ரசித்து ருசித்து கொண்டு வெளியில் வந்தபோதே, முந்தின நாள் டாக்சியில் வந்தபோது பார்த்த கூட்ட நெரிசலில் இப்போது ஸ்கூட்டரை ஓட்ட வேண்டும் என்ற நினைப்பில் உடலை சில புஷ் அப்புகளோடு வார்ம் செய்து கொண்டிருந்தார் ராஜ்கமல்!

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

வருண பகவானின் அருளால் குளிர்ந்திருந்த கொல்கத்தா சாலைகளை கண்டவுடன் அபிஜித்தின் கேமராவின் கண்களும் குளிர்ச்சியடைந்து சில அற்புத காட்சிகளை பதிவு செய்து அருளியது. வீகோ ஸ்கூட்டரின் எலக்ட்ரிக் ஸ்டார்ட்டரை அழுத்தி பயணத்தை துவங்கினர்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

அதைத்தொடர்ந்து, கூகுள் மேப் உதவியுடனும், உள்ளூர்வாசிகளின் வழிகாட்டுதல்களுடன் முக்கிய துர்காபூஜை பந்தல்களை நோக்கி எமது குழுவினர் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களில் புறப்பட்டனர். அவ்வப்போது இன்டர்நெட் இணைப்பு பிரச்னையால் கூகுள் மேப் மக்கர் செய்ததால், பயணத்தில் சிறு தடங்கல்களை சந்திக்க நேரிட்டது.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

நேரம் ஆக ஆக மூன்று பேரின் மொபைல்போன்களும் சார்ஜ் தீர்ந்து போனதால், மேப் இல்லாமல் செல்வது சிக்கலாகி போனது. அப்போது, டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் சார்ஜர் வசதி இருப்பதை ராஜ்கமல் நினைவூட்ட, உடனடியாக மொபைல்போனை சார்ஜ் செய்துகொண்டனர். வீகோ ஸ்கூட்டரில் இருக்கும் மொபைல் சார்ஜர் வசதி, அவசர சமயங்களுக்கு மிக உகந்தது என்பதை உணர்த்தியது.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

மொபைலும் கையுமாக இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு வீகோ ஸ்கூட்டரில் இருக்கும் மொபைல்சார்ஜர் மிக சிறப்புமிக்கதாக இருக்கும்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

சிறிது நேர பயணத்திற்கு பின் முதல் துர்காபூஜை பந்தலை அடைந்தனர். முதன்முதலில் பார்க்கும்போதும், பல்வண்ண மின் விளக்குகளில் துர்காபூஜை பந்தல் பரவசத்தை கூட்டியது.அங்கு பக்தர்களின் வழிபாடும், சிரத்தையும் எமது குழுவினரையும் மெய்மறக்க வைத்தது.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

ஒவ்வொரு பந்தலையும் மிக பிரம்மாண்டமாக அமைத்திருந்தனர். அவர்களின் சிரத்தையையும், பக்தியையும் காணும்போது, கொல்கத்தா கலாச்சார தலைநகராக விளங்குவதில் ஆச்சரியமேதுமில்லை. துர்காபூஜை பந்தல்கள் மட்டுமில்லை, கொல்கத்தாவின் எல்லா பகுதிகளுமே துர்காபூஜை கொண்டாட்டத்தில் திளைத்து நிற்கிறது. அதற்கு வண்ண மின் அலங்கார விளக்குகள் கூடுதல் உற்சாகம் சேர்க்கிறது.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

மேலும், கூகுள் மேப் உதவி இருந்தாலும், முதல் பாதி நாள் சில குழப்பங்களுடன் சிரமப்பட்டு கடந்தனர். அதேநேரத்தில், கொல்கத்தா சாலைகளை எதிர்கொள்வதற்கு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் சிறப்பாக துணைபுரிந்தது. பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளை ஓட்டிய ஜோபோவின் கைகளுக்கு டிவிஎஸ் ஸ்கூட்டரின் எஞ்சின் ஒரு புதுவித அனுபவத்தை தந்ததாம்.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

இதன் 110சிசி எஞ்சின் செயல்திறன் மெச்சும்படியாகவே தெரிவித்தார். ஒருவேளை, பஸ் அல்லது வாடகை காரில் சுற்றி பார்க்க நினைத்திருந்தால் அது நிச்சயம் ஒரு தவறான முடிவாகவே இருந்திருக்கும் என்பது ஒவ்வொரு இடத்தையும் கடக்கும்போது உணர முடிந்ததாம். அந்தளவு போக்குவரத்து நெரிசலும், கூட்ட நெரிசலும் கொல்கத்தாவை அல்லோகலப்படுத்தியது.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

முக்கிய பந்தல்களை கண்டு ரசிப்பதற்குள் முதல் நாள் முடிந்து போனது. மொத்தம் 20 கிமீ தூரம் பயணித்திருந்தனர். நிச்சயம் மீட்டர் டாக்சியை புக் செய்திருந்தால், எமது கணக்குப்படி ரூ.800 வரை செலவிட்டிருக்க வேண்டியிருக்கும். ஆனால், டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் எங்களது பயணத்தை வெறும் 25 ரூபாய் பெட்ரோலில் முடித்துக் கொடுத்தது.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால், அந்த போக்குவரத்து நெரிசலையும், கூட்ட நெரிசலையும் எளிதாக கடப்பதற்கும், திட்டமிட்டப்படி கடப்பதற்கும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் பெரிதும் துணைபுரிந்தது. அலுவலகம் செல்லும் இளைய சமுதாயத்தினரை குறிவைத்தே இந்த ஸ்கூட்டரை வடிவமைத்து இருப்பதாக டிவிஎஸ் தெரிவித்தது.

 கொல்கத்தாவில், துர்காபூஜையை டிவிஎஸ் வீகோவுடன் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

அதனை ஒப்புக்கொள்ளும் விதத்தில், டிசைன், செயல்திறனிலும், வசதிகளிலும் அசத்தியதாம் டிவிஎஸ் வீகோ. தினசரி நகர்ப்புற சாலைகளில் பயன்படுத்துவதற்கு இளைஞர்களுக்கு மிகச்சிறந்த போக்குவரத்து சாதனம் டிவிஎஸ் வீகோ என்றால் மிகையில்லை என்ற உபதகவலுடன் முதல் நாள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர் ஜோபோ அண்ட் கோ.

தொடரும்...

துர்காபூஜை கொண்டாட்டங்கள் தொடர்ச்சி...!!

துர்காபூஜை கொண்டாட்டங்கள் தொடர்ச்சி...!!

துவக்கத்தில் கூறிய அந்த சவால் என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்த செய்தியை படிக்கவும்!

துவக்கத்தில் கூறிய அந்த சவால் என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்த செய்தியை படிக்கவும்!

English summary
We decided to hop onto the Wego and explore the grand Durga Puja celebrations on the streets of Kolkata. Why, you ask? What better way to ring in the festive month of October, no? Read the complete details in Tamil.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark