தீபாவளி கொண்டாட்டத்தை சிறக்க வைத்த டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

Written By:

நாட்டின் பாரம்பரிய பண்டிகைகள் கொண்டாட்டத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் டிரைவ்ஸ்பார்க் டீம் கொண்டாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜை கொண்டாட்டங்களை கண்டு களிக்க உதவிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் இந்த முறை தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திலும் திளைக்க வைத்தது.

ஆம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை புனே நகரில் கொண்டாடியது டிரைவ்ஸ்பார்க் டீம். பாரம்பரிய பெருமைமிகு நகரங்களில் ஒன்றான புனே நகரில் தீபாவளி கொண்டாட்டத்தை காண்பதற்கும், அங்குள்ள முக்கிய இடங்களுக்கு செல்லவும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்தான் உதவியது.

தீபாவளி பண்டிகை என்றதும் புத்தாடைகள், வகை வகையான பலகாரங்கள், பட்டாசுதான் நினைவுக்கு வரும். ஆம், இளம்பிராயத்தில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசு டப்பாக்களுடன் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரில் வரும் அப்பாவின் நினைவு வந்து போகிறது. குடும்பத்தினர் மற்றும் தெருவில் உள்ள நண்பர்களுடன் பலகாரங்களை பகிர்ந்து கொண்டு, சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடிய நினைவுகள் பொக்கிஷமாக மனப் பெட்டகத்தில் போட்டு பூட்டி வைத்திருக்கிறோம்.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது. ஆம், பழையன கழிதலும், புதியன புகுதலும் தவிர்க்க முடியாத கால ஓட்டத்தில் இப்போது தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் விதமும் மாறியிருக்கிறது. அது எவ்வாறு மாறியிருக்கிறது, புனே மக்களின் தீபாவளி கொண்டாட்டத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் சுற்றி பார்த்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரை பார்த்தவுடனே, அப்பாவின் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் நினைவுக்கு வந்துபோகிறது. இடது கையில் கியர், வலது காலில் பிரேக், மணல் சாலைகளில் சிக்கித் திணறும் சிறிய சக்கரங்கள் என்றிருந்த அந்த பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் அப்போதைய அந்தஸ்தின் அடையாளம்.

மங்கலான ஹெட்லைட் வெளிச்சம், சரிவான சாலைகளில் ஒரு காலால் பிரேக் பிடித்துக் கொண்டு மறுகாலை தரையில் ஊன்றி நிற்க வேண்டிய அவசியம், பஞ்சர் ஆனால் நடுவழியில் தவிப்பு என்றிருந்த பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர்கள், கால மாற்றத்தின் கரைகளில் காணாமல் போனது.

பள்ளம் மேடுகளை சமாளித்து, சொகுசான பயணத்தையும் வழங்கும் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் சஸ்பென்ஷன், பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, ட்யூப்லெஸ் டயர்கள், பிரகாசமான ஹெட்லைட், சரிவான சாலையில் சென்று நிற்கும்போது பிரேக்கில் ஒரு காலை வைத்து தடுமாறுவதை தவிர்க்க கையிலேயே பிரேக் லிவர் கட்டுப்பாடு போன்ற அம்சங்களுடன் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் இன்றைய தலைமுறையினரை மட்டுமல்ல, நம்முடைய அப்பா தலைமுறையையும் கவர்ந்துவிட்டது.

கார், பைக்குகளை மறக்கச் செய்திருக்கும் இன்றைய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அம்சங்கள் பொருந்திய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் புனே நகரில் தீபாவளி கொண்டாட்டத்தை ரசிக்க சென்றதில் மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது.

தீபாவளி பண்டிகையின் சாரத்தை உணர்ந்து கொள்ள புனே நகரை டிரைவ்ஸ்பார்க் டீம் தெரிவு செய்ததற்கு முக்கிய காரணம், நாட்டின் மிக பழமையான நகரங்களில் ஒன்று புனே. 5ம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த நகரமானது, புண்ணிய நகரம் என்று பொருள்படுகிறது. அதனால்தான் தீபாவளி பண்டிகையை கொண்டாட புனே நகரை தேர்வு செய்தோம். பெங்களூர் போன்ற இதமான சீதோஷ்ண நிலையும் புனே தீபாவளி கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை கூட்டியது.

இந்து மதத்தினரின் வளமைக்கும், செழுமைக்கும் உதாரணமாக விளங்கும் லட்சுமி தேவி சிலைகள் புனே நகரின் ஒவ்வொரு பகுதியிலும் காண முடிந்தது. மேலும், வனவாசத்தை முடித்துக் கொண்டு அயோத்திக்கு ராமரும், சீதையும் திரும்பியதை கொண்டாடும் நாளாகவும் இதனை குறிப்பிடுகின்றனர். உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் தீப ஒளி திருநாளாக பல்வேறு வடிவங்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

சரி, மிக பழமையான இந்த நகரத்தில் தீபாவளி கொண்டாட்டம் எப்படியிருக்கிறது என்பதை காண்பதற்கு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் எமது டிரைவ்ஸ்பார்க டீம் புறப்பட்டுவிட்டது. வாருங்கள் டிவிஎ்ஸ வீகோ ஸ்கூட்டரில் புனே நகரின் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அற்புதமான படங்கள், தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

முதல் நாளில் மூன்று டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களுடன் எமது குழுவினர் பயணத்தை துவங்கினர். முதலாவதாக கசபா கணபதி கோயிலுக்கு சென்றனர். முழு முதற்கடவுளாக வழிபடப்படும் வினாயகரை வழிபட்டு பயணத்தை துவங்கினர். புனே நகரின் மையப்பகுதியில் உள்ள பழமையான வினாயகர் கோயிலாக இந்த கசபா கணபதி கோயில் கருதப்படுகிறது.

கசபா கணபதி கோயிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு நேராக தீபாவளி விற்பனை களைகட்டி இருந்த கடைத் தெருக்களில் ரவுண்ட் அடித்தனர் எமது குழுவினர். அந்த காலை வேளையிலேயே பொருட்களை வாங்க மக்கள் குவியத் துவங்கினர்.

குறிப்பாக, லக்ஷி ரோடு மற்றும் துல்சி பாக் பகுதிகளில் பரபரப்பாக இருந்தது. மேலும், லட்சுமி பூஜைக்காக பொருட்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டினர்.

நெருக்கடி மிகுந்த வியாபார தலங்களிலும், கடைத் தெருவிலும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களின் எழில்மிகு வண்ணங்கள் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. அங்கு ஹாங்காங் லேன் என்ற பகுதியிருக்கிறது. வெளிநாட்டு பொருட்களை செய்யும் அந்த கடைத்தெருவில் இருந்த இளைஞர்களை எமது குழுவினர் ஓட்டிச் சென்ற மூன்று வெவ்வேறு வண்ண வீகோ ஸ்கூட்டர்களும் வெகுவாக கவர்ந்ததை காண முடிந்தது.

கடைத்தெருக்களில் ரவுண்ட் அடித்துவிட்டு வந்த களைப்பை போக்கிக் கொள்ள புனே நகரில் இருந்த மிக பழமையும், பாரம்பரியும் மிக்க கயானி பேக்கரிக்கு எமது குழுவினர் சென்றனர். 1950ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த பேக்கரி வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பதை காண முடிந்தது.

ஸ்ட்ராபெர்ரி பிஸ்கட்டுகளின் மனமும், சுவையும் அலாதி என எமது குழுவினர் சர்டிபிகேட் கொடுத்தனர். அடுத்து அங்கு சுடச்சுட தேனீருடன் களைப்பை போக்கி புத்துணர்ச்சி பெற்ற கையுடன் புனே நகரின் இதர இடங்களை பார்க்க கிளம்பினர்.

புனே நகரின் பரபரப்பு மிகுந்த சாலைகளில் மிக எளிதாகவும், விரைவாகவும் கடந்து கொண்டிருந்தனர். அன்றைய தினத்தின் மாலை வேளையில் புனேயில் மலைமீது அமைந்துள்ள பார்வதி கோயிலுக்கு எமது குழுவினர் சென்றனர். நெரிசல் மிகுந்த அந்த மலைச் சாலையை எளிதாக கடக்க உதவியது டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்.

மலை மீது ஏறி பார்த்ததும், தீபாவளி பண்டிகை களைகட்டியதை காண முடிந்தது. வண்ண ஒளியை சிதறடித்த  பட்டாசுகளாலும், மின் விளக்குகளின் ஒளி வெள்ளத்திலும் புனே நகரம் தீபாவளிக்கு முன்னதாக வரும் தந்திராஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தது.

அந்த கண்கொள்ளா காட்சியில் மெய்மறந்து கொண்டிருந்த எமது குழுவினர் படங்களை எடுப்பதற்கும் தவறவில்லை. தந்திராஸ் தினத்தை நிறைவு செய்து கொண்டு தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை ரசிக்க எமது குழுவினர் தங்குமிடத்திற்கு திரும்பினர்.

புனே நகரின் தீபாவளி கொண்டாட்டம், அங்குள்ள புராதன இடங்களுக்கு சென்ற அனுபவங்களை அடுத்த பாகத்தில் முழுமையாக படிக்கலாம். காத்திருங்கள்.

English summary
Next on our list of Indian festivals was Diwali at the Cultural Capital Of Maharashtra, Pune. So, Here #WegoPune.
Please Wait while comments are loading...

Latest Photos