டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர், 8 புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யபடுகிறது

Written By:

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் இப்போது ஒரே வேரியண்ட்டிலும், பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

ஏராளமான வண்ணங்களில் கிடைக்கும், டிவிஎஸ் வீகோ பற்றிய கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

நாடு முழுவதும் ஒரே வேரியண்ட்;

நாடு முழுவதும் ஒரே வேரியண்ட்;

டிவிஎஸ் நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபட்ட ஸ்கூட்டர்களில், வீகோ தான் மிகவும் புகழ்வாய்ந்த ஸ்கூட்டராக திகழ்கிறது.

முன்னதாக, டிவிஎஸ் நிறுவனம், இந்த வீகோ ஸ்கூட்டரின் மேம்படுத்தபட்ட வடிவத்தை வெளியிட்டது. புதிய மற்றும் புதுமையான வீகோ ஸ்கூட்டர் மக்களிடம் பெற்ற வரவேற்ப்பை அடுத்து, பிற பழைய வேரியண்ட்களை டிவிஎஸ் நிறுவனம் விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளது.

இதனால், இனி இந்தியா முழுவதும் வீகோ ஸ்கூட்டர் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.

சிங்க் பிரேக்கிங் டெக்னாலஜி பற்றி...

சிங்க் பிரேக்கிங் டெக்னாலஜி பற்றி...

பொதுவாக வாகனங்கள் இயக்கி கொண்டிருக்கும் போது, எமெர்ஜென்ஸி முறையில் பிரேக் போடும் போது, வாகன ஓட்டிகள் தவறுகள் செய்து, விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.

இதற்கு, ஒரு நல்ல தீர்வாக, டிவிஎஸ் நிறுவனம், தங்களின் வீகோ ஸ்கூட்டர் மாடலில் சிங்க் பிரேக்கிங் டெக்னாலஜி என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தனர்.

இதனால், திடீர் திடீரென பிரேக் உபயோகித்தாலும் கூட, வாகனத்தில் இருந்து நழுவுவதோ அல்லது சறுக்குவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை.

வேறு மாற்றங்கள் எதுவும் இல்லை;

வேறு மாற்றங்கள் எதுவும் இல்லை;

புதிய வீகோ வேரியண்ட் மற்றும் பழைய வேரியண்ட்களுக்கும் இடையில், இந்த சிங்க் பிரேக்கிங் டெக்னாலஜி மட்டுமே மிக முக்கியமான மேம்பாடாக இருந்தது.

இதனால், டிவிஎஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய வழங்குவதற்காக, பிற பழைய வீகோ மாடல் ஸ்கூட்டர்கள் வழங்குவதை நிறுத்தி கொண்டுள்ளது.

இதை தவிர, புதிய வீகோ வேரியண்ட் மற்றும் பழைய வேரியண்ட்களுக்கு இடையில் வேறு எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யபடவில்லை.

பிரேக்கிங் முறையில் தேர்வுகள்;

பிரேக்கிங் முறையில் தேர்வுகள்;

புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரை, டிஸ்க் பிரேக்குகள் அல்லது டிரம் பிரேக்குகள் உள்ளிட்ட வெவ்வேறு பிரேக்கிங் தேர்வு முறைகளுடன் வாங்க முடியும்.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர், மொத்தம் 8 வகையான வெவ்வேறு வண்னங்களின் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

1) டீப் ஸ்கை புளூ

2) மிட்நைட் பிளாக்

3) வால்கேனோ ரெட்

4) மெர்குரி கிரே

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர், மொத்தம் 8 வகையான வெவ்வேறு வண்னங்களின் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

5) ஸ்போர்டி வைட்

6) டியூவல் டோன் ரெட்

7) டியூவல் டோன் புளூ

8) டியூவல் டோன் வைட்

போட்டி ஸ்கூட்டர்கள்;

போட்டி ஸ்கூட்டர்கள்;

இந்திய சந்தைகளை பொருத்த வரை, புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர், யமஹா ரே-இசட், சுஸுகி லெட்ஸ் மற்றும் ஹோண்டா ஆக்டிவா உள்ளிட்ட ஸ்கூட்டர்களிடம் இருந்து கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

விலை;

விலை;

புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் குறித்த விலை விவரங்கள்;

டிரம் பிரேக் கொண்ட டிவிஎஸ் வீகோ - 56,891 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் (மும்பை)

டிஸ்க் பிரேக் கொண்ட டிவிஎஸ் வீகோ - 59,796 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் (மும்பை)

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
TVS Wego Scooter is available in Single Variant and 8 various Colour Options across India. Earlier, TVS had introduced an updated version of the Wego scooter. As this updated model of Wego scooter, TVS decided to discontinue other previous variants. New TVS Wego Scooter comes with Sync Braking technology.
Story first published: Friday, January 8, 2016, 14:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark