டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 4-ஸ்ட்ரோக் மொபட் தமிழ்நாட்டில் அறிமுகம்

By Ravichandran

டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 4-ஸ்ட்ரோக் மொபட் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யபட்டுள்ள டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டிவிஎஸ் மொபட்கள் பற்றி...

டிவிஎஸ் மொபட்கள் பற்றி...

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக முதல் மொபட், 1980-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது. அப்போது முதல், இது மிகவும் புகழ்வாய்ந்த வாகனமாக விளங்குகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 மொபட், 99.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

எரிபொருள் திறனை பொருத்த வரை, டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 மொபட், 1 லிட்டருக்கு சுமார் 67 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 மொபட், உச்சபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

டேங்க் கொள்ளளவு;

டேங்க் கொள்ளளவு;

டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 மொபட், 4 லிட்டர் வரையிலான பெட்ரோல் மட்டுமே தேக்கி கொள்ளும் வகையிலான கொள்ளளவு கொண்டுள்ளது.

எடை;

எடை;

டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 மொபட், 75 கிலோகிராம் எடை கொண்டுள்ளது. எனினும், இது 130 கிலோகிராம் வரையிலான சுமை தூக்கும் திறன் கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

இந்திய வாகன சந்தையில், தற்போதைய நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 மொபட் போட்டியாக எந்த மொபட்-டும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, புதிய டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 மொபட், இதற்கு முந்தைய பதிப்பு மொபட் போன்றே உள்ளது. ஒரே ஒரு மாற்றமாக, இந்த புதிய டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 மொபட், 4-ஸ்ட்ரோக் இஞ்ஜினுடன் வெளியிடபட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.

இதர மாற்றங்கள்;

இதர மாற்றங்கள்;

இதர மாற்றங்களாக, இந்த புதிய டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 மொபட்-டிற்கு முழுமையான பிளாக் மஃப்லர், இஞ்ஜின் மற்றும் ரியர் ஷாக் அப்ஸார்பர்கள் ஆகியவை பொருத்தபட்டுள்ளது.

பிற அறிமுகங்கள்;

பிற அறிமுகங்கள்;

சென்னையை மையமாக கொண்டு இயங்கும், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 200 மற்றும் விக்டர் பைக்கினை அறிமுகம் செய்தது.

இதோடு மட்டுமல்லாமல், இந்திய வாகன சந்தைகளில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு மோட்டார்சைக்கிள்களையும், ஸ்கூட்டர்களையும் அறிமுகம் வழங்கி வருகிறது.

வருங்கால அறிமுகங்கள்;

வருங்கால அறிமுகங்கள்;

வருங்கால அறிமுகங்களின் தொடர்ச்சியாக, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

எளிமையான வாகனம்?

எளிமையான வாகனம்?

ஆரம்பகட்ட இரு சக்கர வாகனங்கள் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும், வயதானவர்கள், வியாபாரிகள் மற்றும் எளிமையான போக்குவரத்திற்கான வாகனம் நாடுபவர்களுக்கு, புதிய டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100 மொபட் சிறந்த தேர்வாக இருக்கும்.

விலை;

விலை;

புதிய டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 100, தமிழ்நாட்டில் 29,539 ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

Most Read Articles
English summary
TVS XL Super 4-Stroke Moped was launched in Tamil Nadu automobile markets. TVS XL Super 4-Stroke Moped weighs just 75 kilograms and has capacity to accommodate a payload of 130 kilograms. TVS Motors says that, XL Super 100 moped shall hit a top speed of 60 km/h. This moped gives mileage of 67 km/l.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X