யுஎம் மோட்டார்சைக்கிள்ஸின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம்

Written By:

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்கள் தரப்பில் இருந்து புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முறைப்படி பிரவேசம் செய்தது. அப்போது முதல், இந்தியாவில் குரிப்பிடதக்க அளவிலான வரவேற்பு பெற்று வருகிறது.

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

தற்போதைய நிலையில், யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், 2 குரூஸர் ரக பைக்குகளை வழங்கி வருகிறது. ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் மற்றும் ரெனிகேட் கமாண்டோ என்ற பெயரிலான இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்திய வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், வெறும் குரூஸர் ரக பைக்குகளுடன் கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. இதனால், ஒரு புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

உயர்அதிகாரி கருத்து;

உயர்அதிகாரி கருத்து;

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் டைரக்டரான ராஜீவ் மிஷ்ரா, தங்கள் நிறுவனம் 230 சிசி - 250 சிசி கொள்ளளவு கொண்ட ஒரு புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

இந்த மோட்டார்சைக்கிள், ஹைப்பர்ஸ்போர்ட் 230 என்ற டூ வீலராக இருக்கலாம். இது ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் சோதனைகளும் இந்தியாவில் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இதனால் இது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹைப்பர்ஸ்போர்ட் 230 மோட்டார்சைக்கிள், சிங்கிள் சிலிண்டர் உடைய ஏர் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இதன் இஞ்ஜின், 7500 ஆர்பிஎம்களில் 16 பிஹெச்பியையும் 5500 ஆர்பிஎம்களில் 17.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

சஸ்பென்ஷன், எடை;

சஸ்பென்ஷன், எடை;

ஹைப்பர்ஸ்போர்ட் 230 மோட்டார்சைக்கிளின் முன் பக்கத்தில் லாங் டிராவல் டெலஸ்கோப்பிக் ஃபிரன்ட் ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தபட்டுள்ளது. இந்த ஹைப்பர்ஸ்போர்ட் 230 மோட்டார்சைக்கிள், 144 கிலோகிராம் எடை கொண்டதாக உள்ளது.

போட்டி;

போட்டி;

ஹைப்பர்ஸ்போர்ட் 230 மோட்டார்சைக்கிள், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது.

விலை;

விலை;

ஹைப்பர்ஸ்போர்ட் 230 மோட்டார்சைக்கிள், 1.5 லட்சம் ரூபாய் முதல் 1.8 லட்சம் ரூபாய்-க்கும் இடைப்பட்ட விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அடுத்து ஒரு அமெரிக்கன் பிராண்டில் வரும் புதிய க்ரூஸர் பைக்!!

யுஎம் மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்- விலை குறைவான பிரிமியம் மாடல்!

யுஎம் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Pictures Credit ; www.zigwheels.com

English summary
UM Motorcycles will launch its new adventure motorcycle, probabaly named as Hypersport 230 at 2018 Delhi Auto Expo. UM Motorcycle debuted Indian market at 2016 Auto Expo. UM India Director, Rajeev Mishra stated - their company is planning to launch new 230cc-250cc adventure motorcycle. This shall be Hypersport 230, already present in international markets. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark