விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்கூட்டர்கள்!

Written By:

இயக்குவதற்கும், கையாள்வதற்கும் எளிதாக இருக்கும் ஸ்கூட்டர்களுக்கான மவுசு வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால், ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.

அவ்வாறு, விரைவில் அறிமுகமாக தயாராகி வரும் புதிய ஸ்கூட்டர் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் என்டார்க் 125

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த ஸ்கூட்டரின் கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. மிகவும் வித்தியாசமான வடிவமைப்புடன் பார்வையாளர்களை கவர்ந்தது.

அறிமுகம் எப்போது?

இந்த ஸ்கூட்டரை விரைவில் உற்பத்திக்கு கொண்டு செல்லும் முனைப்பில் இருக்கிறது டிவிஎஸ் மோட்டார்ஸ். இந்த புதிய ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. ஹோண்டா ஆக்டிவா 125, சுஸுகி ஆக்செஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். ரூ.70,000 முதல் ரூ.85,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்பா ஜிடிஎஸ்300

வெஸ்பா ஜிடிஎஸ்300 ஸ்கூட்டரை வெஸ்பா நிறுவனம் இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. எல்சிடி திரை மற்றும் அனலாக் டயல்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இருக்கும்.

எஞ்சின் விபரம்

இந்த ஸ்கூட்டரில் 278சிசி எஞ்சினும், சிவிடி கியர்பாக்ஸும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அயல் நாடுகளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்துடந் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.4 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

ஹீரோ ஸிர்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரிமியம் ஸ்கூட்டர் மாடலாக அறிமுகமாக இருக்கிறது. இது இரு விதமான மாடல்களில் வழங்கப்படும். அதாவது, சமமான ஃபுட்போர்டு கொண்டதாகவும், ஐரோப்பிய ஸ்கூட்டர்களை போன்று ஏற்ற இறக்கமான ஃபுட்போர்டு கொண்டதாகவும் இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

இந்த ஸ்கூட்டரில் 13.8 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி இன்டிகேட்டர்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும். ரூ.80,000 முதல் ரூ.90,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் ஜுபிடர் FI

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் புதிய ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதிக மைலேஜ் மற்றும் மாசு உமிழ்வு கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்பவும் இந்த மாடல் களமிறக்கப்படுகிறது.

அறிமுக விபரம்

இந்த ஸ்கூட்டரில் அதே 110சிசி எஞ்சின்தான் இடம்பெற்றிருக்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

 ஹீரோ டேர்

ஆக்டிவா ஸ்கூட்டரால் ஹீரோ நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, ஹீரோ அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மாடல்களில் டேர் ஸ்கூட்டரும் ஒன்று. இளைய சமுதாயத்தினரை குறிவைத்து இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டியூவல் கலர்

இந்த ஸ்கூட்டர் இரட்டை வண்ணக்கலவை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்கூட்டரிலும் 125சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூ.60,000 முதல் ரூ.65,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதர் எனர்ஜி எஸ்340

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல். நகர்ப்புற பயன்பாட்டுக்கு மிக உகந்த அம்சங்களுடன், மாசற்ற சூழ்நிலையை உருவாக்கும் முனைப்பில் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.

ஸ்மார்ட் ஸ்கூட்டர்

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் பேட்டரியை ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றி விட முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் பயணிக்கும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும். ரூ.1 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வருகிறது.

யமஹா என்மேக்ஸ் 155

மேக்ஸி ஸ்கூட்டர் ரகத்தில் யமஹா அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஸ்கூட்டர் மாடல். கட்டுமஸ்தான தோற்றத்தை டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் இளைஞர்களை வசீகரிக்க வருகிறது.

பவர்ஃபுல் ஸ்கூட்டர்

இந்த ஸ்கூட்டரில் 150சிசி எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரூ.85,000 முதல் ரூ.95,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் டேஷ்

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடல். ஏற்கனவே இந்தோனேஷியாவில் விற்பனையில் உள்ளது. மேலும், இந்திய மண்ணிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் மற்றும் மொபட்டின் சிறப்பம்சங்களை கலந்து செய்யப்பட்ட மாடலாகவே கூறலாம்.

க்ராஸ்ஓவர் ஸ்கூட்டர்

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கிலும், வீகோ, ஜுபிடர் உள்ளிட்ட ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்படும் அதே 109.7சிசி எஞ்சின் இந்த ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் உள்ளது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், பெரிய சக்கரங்கள் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும் மாடலாக வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Here are the upcoming scooters in India along with their expected price, expected launch date, specs and features.
Story first published: Monday, November 21, 2016, 14:21 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos