நெருப்புடா..... 400 கி.மீ வேகத்தில் பறந்த கவாஸகி நிஞ்சா எச்2ஆர் பைக்...

Written By: Krishna

நம்ம ஊரு எக்ஸ்பிரஸ் ரயில்களெல்லாம் ஏதோ ஒரு இடத்தில் சிக்னல் கிடைக்காமல் நின்று விட்டால், டிரெயினுக்குள் பல பேர் அதிருப்தி குரல்களை எழுப்புவார்கள்.

ஜப்பானில் உள்ள புல்லட் ரயிலின் வேகத்தைப் பாருங்கள்.... நம்ம இன்னும் பழைய பல்லவன் டிரான்ஸ்போர்ட் மாதிரி ரயில் ஓட்டீட்டு இருக்கோம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுவதுண்டு...

உண்மையில் ஜப்பான் புல்லட் ரயிலின் வேகம் என்ன தெரியுமா?.. மணிக்கு 320 கிலோ மீட்டர்கள். ப்ப்ப்பா.... என்று விஜய் சேதுபதி மாதிரி மெர்ஸல் ஆக வேண்டாம். இதுக்கு மேலே ஒரு சாதனையை துருக்கி நாட்டைச் சேர்ந்த கெனான் சொஃப்க்லூ என்ற நபர் சத்தமில்லாமல் செய்து முடித்துள்ளார்.

மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை இயக்கியிருக்கிறார். புல்லட் ரயில்தானே பாஸ்... விடுங்க இதென்ன பெரிய விஷயம் என நினைக்காதீர்கள். அவர் ஓட்டியது ரயிலல்ல... பைக்...

நிஜந்தாங்க, மோட்டார் சைக்கிளில் 400 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்துள்ளார் அவர்.

100 அல்லது 120 கிலோ மீட்டர் வேகத்தில் யாராவது பைக் ஓட்டினாலே, பறந்துட்டுப் போறானேப்பா... என்று நாம் சொல்வதுண்டு.

ஆனால், 400 கிலோ மீட்டர் என்பது நம்பவே முடியாததொரு அசுர வேகம். இஸ்தான்புல் அருகே புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பாலத்தில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கவாஸகி நிஞ்சா எச்2ஆர் பைக்கில்தான் அவர் இந்த வித்தையைக் காட்டியுள்ளார்.

அந்த பைக்கின் அதிகபட்ச வேகமே 380 கிலோ மீட்டர் வேகம்தான். அதில் சில மாறுதல்களைச் செய்து இந்த சாதனையை சாத்தியமாக்கிறார் கெனான் சொஃப்க்லூ. பைக்கை எடுத்த 26 விநாடிகளுக்குள் 400 கிலோ மீட்டர் வேகத்தைத் தொட்டு பார்ப்பர்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார் இவர்.

இதற்காக 4 மாதங்கள் பயிற்சி மேற்கொண்டதுடன், பல கட்ட முயற்சிளையும் மேற்கொண்டுள்ளார்.

998 சிசி திறன் கொண்ட கவாஸகி நிஞ்சா எச்2ஆர் பைக், 310 பிஎச்பி, 156 எம்என் டார்க்கை அசால்ட்டாக வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

அனல் பறக்கும் காட்சிகள் என்று படத்தில் சொல்வார்கள்... உண்மையில் 400 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த இந்த முயற்சிதான் தீப்பொறி பறக்கும் பக்கா மாஸ் காட்சி.

English summary
Video: Kawasaki Ninja H2R Hits 400km/h.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark