ஸிப்பி என்ற மாஸ்காட்டின் பிறந்தநாளை கொண்டாடும் யமஹா நிறுவனம்

Written By:

ஸிப்பி என அழைக்கபடும் மாஸ்காட்-டின் பிறந்தநாளை யமஹா நிறுவனம் இன்றும் (ஜனவரி 9), நாளையும் (ஜனவரி 10) அன்று கொண்டாடுகிறது.

ஸிப்பி என்பது யமஹா நிறுவனத்தின் மாஸ்காட்-டுக்கு சூட்டபட்டுள்ள பெயராகும். இந்த ஸிப்பி-யின் இரண்டாவது பிறந்தநாள் ஜனவரி 9-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் பிறந்தநாள் தொடர்பாக, இந்தியா முழுவதும் ஏராளமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

யமஹா டீலர்ஷிப்ளில் குழந்தைகளுக்கு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடத்தபட்டு வருகிறது. ஸிப்பி-யின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்குபெறும் குழந்தைகளை ஈர்க்கும் விளையாட்டுகளும், பரிசுகளும் உள்ளது. யமஹா இந்தியா, குழந்தைகளுக்கு என மியூசிக் போட்டியையும் நடத்துகிறது.

இந்த மியூசிக் போட்டியிலும், பிற போட்டிகளில் வெற்றி பெறும் யமஹா நிறுவனத்திடம் இருந்து பரிசுகள் வழங்கபட உள்ளது. யமஹா ஸிப்பி கார்னிவல் என்ற பெயரில், ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களுக்கு ஒரு குறுகிய கால போட்டியும் நடத்தபடுகிறது.

ஏதேனும் யமஹா 2 சக்கர வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் அல்லது டெஸ்ட் டிரைவ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு லக்கி டிரா ஆஃபரும் காத்துகிடக்கிறது.

லக்கி டிரா மற்றும் ஸிப்பி கார்னிவல் போட்டிகளில் வெற்றி பெரும் வாடிக்கையாளர்களுக்கு, யமஹா நிறுவனம் ஒரு ஹெல்மெட்டை இலவச பரிசாக வழங்குகிறது. யமஹா நிறுவனத்தின் ஒவ்வொரு டீலர்ஷிபகளிலும் இருந்து, ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் தேர்ந்தெடுக்கபட உள்ளனர். பரிசாக கிடைக்கும் ஹெல்மெட்-டுக்கு பதிலாக வேறு ஒரு பரிசையோ அல்லது பணமாகவோ பெற முடியாது.

yamaha-celebrates-zippy-second-birthday-on-9-january-2016

ஸிப்பி என்ற மாஸ்காட் உருவாக்கபட்டதன் நோக்கமே இந்தியாவில் பாதுகாபான வாகன இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக தான் என கூறப்படுகிறது. அனைத்து வாகன ஓட்டிகளும், அனைத்து சாலை விதிகளையும் பின்பற்றி தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என யமஹா இந்தியா நிறுவனம் விரும்புகிறது.

யமஹா நிறுவனம், ஸிப்பி என்ற மாஸ்காட்-டை முன்னிலை படுத்தி குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளை போதித்து வருகிறது. இன்றைய குழந்தைகள் தான், நாளைய எதிர்கால தலைமுறையாக விளங்க உள்ளனர் என்பதால் தான், யமஹா நிறுவனம் குழந்தைகளுக்கு இப்படி நல்ல நெறிகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கி வருகிறது.

English summary
Yamaha celebrates Zippy's Second Birthday On January 9, 2016. Zippy is the mascot for the Japanese two-wheeler brand. Several varied types of events are organised across India on January 9, 2016, celebrating Zippy's second birthday. Zippy's mission promoting safe riding by all riders in India.
Story first published: Saturday, January 9, 2016, 11:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark