யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர், ஏப்ரல் 14-ல் இந்தியாவில் அறிமுகம்

Written By:

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர், ஏப்ரல் 14-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின்றன.

விரைவில் வெளியாக உள்ள யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர்...

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர்...

யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தங்களின் ஏராளமான தயாரிப்புகளை காட்சிபடுத்தினர்.

அப்போது, இந்த யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டரும் காட்சிபடுத்தபட்டது. தற்போது, இந்த யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர், ஏப்ரல் 14-ஆம் தேதி அறிமுகம் செய்யபடும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர், 113 சிசி, புளூ கோர், சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 7 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 8 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், தற்போது இந்தியாவில் கிடைக்கும் பிற யமஹா ஸ்கூட்டர் மாடல்களை போலவே இருக்கும்.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் யமஹா நிறுவனம், இந்த சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டரை அல்லாய் வீல்களுடன் வழங்குகின்றனர்.

மேலும், இந்த ஸ்டைலிஷான மற்றும் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டருக்கு, முன் பக்கத்தில் தேர்வு முறையிலான டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகிறது.

யமஹா வடிவமைப்பாளர்கள், 2016-ஆம் ஆண்டிற்காக இந்த சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டரை மறுவடிவமைத்துள்ளனர்.

நிறங்கள்;

நிறங்கள்;

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர், பல்வேறு பிரத்யேகமான நிறங்களிலும், டீகேல் தேர்வுகளிலும் கிடைக்கும்.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டருக்கு மறுவடிவமைக்கபட்ட ஸ்பீடோமீட்டர் வழங்கபட்டுள்ளது. இது 21 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, ஹோண்டா டியோ, டிவிஎஸ் ஜுப்பிடர், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர், 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலைகள் குறித்த எந்த விதமான தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

எனினும், டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் அதிக விலையில் விற்கப்படலாம்.

English summary
Yamaha Cygnus Ray-ZR Scooter shall be introduced in India on April 14th. This Scooter shall be available in 2 variants. This scooter has redesigned speedometer and will boast of 21-litre boot space. Yamaha Cygnus Ray-ZR Scooter is offered with sporty alloy wheels. It is offered with optional front disc brake. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark