யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர் ஏப்ரலில் அறிமுகம்

By Ravichandran

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர் ஏப்ரல் இறுதியில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் வெளியாக உள்ள யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர்...

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர்...

யமஹா மோட்டார்ஸ் நிறுவனம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான தயாரிப்புகளை காட்சிபடுத்தியது. ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம், சல்யூட்டோ ஆர்எக்ஸ் என்ற பெயரில் புதிய பைக்கை அறிமுகம் செய்தனர்.

இந்தியாவில் அடுத்ததாக, யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

பிற தயாரிப்புகள்;

பிற தயாரிப்புகள்;

சமீபத்தில் தான், யமஹா இந்தியா நிறுவனம், ரே ஸ்கூட்டரை தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விலக்கி கொண்டனர்.

தற்போதைய நிலையில், யமஹா நிறுவனம் ரே-இசட், ஆல்ஃபா, பேஸ்ஸினோ ஆகிய ஸ்கூட்டர் மாடல்களையே இந்தியாவில் வழங்கி வருகின்றனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர், 113 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 7 பிஹெச்பியையும், 8 என்எம் டார்க் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. யமஹா நிறுவனம், இந்த ஸ்கூட்டரின் முன் சக்கரத்திற்கு தேர்வு முறையிலான டிஸ்க் பிரேக்கை வழங்குகின்றன.

டிசைன்;

டிசைன்;

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர், வழக்கமான ரே-இசட்ஆர் ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு அமைக்கபட்டுள்ளது. மெக்கானிக்கல் முறையில் எந்த விதமான மாற்றங்களும் இருக்காது.

யமஹாவின் முக்கிய கவனமே புதிய டிசைன் குறித்த விஷயங்களில் தான் உள்ளது. இதற்கு முந்தைய மாடலை காட்டிலும், சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டருக்கும் யமஹா டிசைனர்கள் கூர்மையான மற்றும் ஆக்கிரோஷமான தோற்றம் வழங்க முடிவு செய்துள்ளனர்.

போட்டி;

போட்டி;

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் அறிமுகம் செய்யபடும் போது, ஹோண்டா டியோ, ஹீரோ மோட்டோகார்ப். வழங்கும் மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டிவிஎஸ் ஜுப்பீட்டர் ஆகிய ஸ்கூட்டர்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர், 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலைகள் குறித்த எந்த விதமான தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

எனினும், டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் அதிக விலையில் விற்கப்படலாம். யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர், ரே-இசட் ஸ்கூட்டரை காட்டிலும் 3,500 ரூபாய் கூடுதலான விலையில் விற்கபட வாய்ப்புகள் உள்ளது.

Most Read Articles
English summary
Yamaha Cygnus Ray-ZR Scooter presented by Yamaha Motors India is touted to be launched by April-End. Cygnus Ray-ZR by Yamaha is based on regular Ray-ZR scooter. Mechanically there are no much changes. The main focus is on all-new design. Optional disc brake for front tyre of Cygnus Ray-ZR Scooter shall be fitted by Yamaha. To know more, check here...
Story first published: Wednesday, April 20, 2016, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X