யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

யமஹா நிறுவனம் வழங்கும் சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

சிக்னஸ் ரே இசட்ஆர்...

சிக்னஸ் ரே இசட்ஆர்...

யமஹா நிறுவனம் வழங்கும் சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர், அடுத்த தலைமுறை ஆண்களின் அசல் ஸ்கூட்டர் ('Next-Generation Real Boy's Scooter') என்ற கருவை மையபடுத்தி வடிவமைக்கபட்டு, உருவாக்கபட்டுள்ளது.

சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர் முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

கிடைக்கும் வேரியண்ட்கள்;

கிடைக்கும் வேரியண்ட்கள்;

யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர், 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்த சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர், ட்ரம் பிரேக் உடைய வேரியண்ட் மற்றும் ஃப்ரண்ட் டிஸ்க் பிரேக் உடைய வேரியண்ட் என 2 தேர்வுகளில் கிடைக்கிறது.

புக்கிங்;

புக்கிங்;

தற்போதைய நிலையில், யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டரின் புக்கிங், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து யமஹா ஷோரூம்களிலும் ஏற்கபடுகிறது.

டெலிவரி;

டெலிவரி;

யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டரின் டெலிவரி, இந்த மே மாதம் அல்லது அதற்கு பின்பு தான் துவங்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர், 113 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட், யமஹாவின் புளூ கோர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், கண்டினியுவஸ்லி வேரியபில் டிரான்ஸ்மிஷன் எனப்படும் தொடர்ந்து மாறுபடும் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

எடை;

எடை;

யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர், 103 கிலோகிராம் என்ற மிதமான எடை கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர், ஒரு லிட்டருக்கு 66 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கிடைக்கும் ஸ்கூட்டர்கள்;

கிடைக்கும் ஸ்கூட்டர்கள்;

தற்போதைய நிலையில், இந்திய வாகன சந்தைகளில் ரே இசட், ரே இசட்ஆர், ஆல்ஃபா மற்றும் ஃபேஸ்ஸினோ, ஆகிய மாடல்களை வழங்கி வருகிறது.

இந்த சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டரின் அறிமுகத்தின் மூலம் குறைந்தது 10% சந்தையை பிடிக்க யமஹா நிறுவனம் நோக்கம் கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர், ஹோண்டா டியோ, ஹேரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் (ட்ரம் பிரேக் உடைய வேரியண்ட்) - 52,000 ரூபாய்

யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் (ஃப்ரண்ட் டிஸ்க் பிரேக் உடைய வேரியண்ட்) - 54,500 ரூபாய்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர் ஏப்ரலில் அறிமுகம்

யமஹா சிக்னஸ் ரே-இசட்ஆர் ஸ்கூட்டர், ஏப்ரல் 14-ல் இந்தியாவில் அறிமுகம்

யமஹா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Yamaha Motors India has launched their all-new Cygnus Ray ZR scooter in India. Yamaha showrooms across India accepting bookings alone now. Deliveries are expected during or after May 2016. Yamaha has kept their scooter light at 103 kgs. This Scooter delivers mileage of 66 km/l. To know more, Yamaha Cygnus Ray ZR scooter, check here...
Story first published: Friday, April 22, 2016, 11:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark