யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிள், தீபாவளியின் போது இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

யமஹா நிறுவனம் தயாரிக்கும் யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிள், இந்திய வாகன சந்தைகளில் இந்த தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பிலான நிறுவனங்கள் தீபாவளி அல்லது தசரா போன்ற பண்டிகைக்காலங்களின் போது தங்களின் தயாரிப்புகளை அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனமும், இந்த தீபாவளியின் போது, தங்களின் யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளது.

எம்டி-03 மோட்டார்சைக்கிள் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

யமஹா எம்டி-03...

யமஹா எம்டி-03...

யமஹா நிறுவனம் தயாரித்து வழங்கும் யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிள், கொஞ்ச காலத்திற்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட யமஹா ஆர்3 மோட்டார்சைக்கிளின் நேக்கட் வடிவம் (வெர்ஷன்) ஆகும்.

யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிள், ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் உள்ள யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிளுக்கு, லிக்விட்-கூல்ட், ட்வின்-சிலிண்டர் உடைய 321 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 41.4 பிஹெச்பியையும், 29.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

யமஹா ஆர்3 மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட போதும், ஸ்டைலிங் பொருத்த வரை யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிள், நேரான ரைடிங் நிலை (position) கொண்டுள்ளது.

டயர்கள்;

டயர்கள்;

யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிளின் பின் பக்கத்தில் 140 செக்ஷன் டயரும், முன் பக்கத்தில் 110 செக்ஷன் டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிளின் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிளின் முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் போர்க்குகளும், பின் பக்கத்தில் மோனோஷாக் போர்க்கும் பொருத்தப்பட்டுள்ளது.

செலவுகள் குறைப்பு;

செலவுகள் குறைப்பு;

செலவுகளை குறைக்கும் நோக்கில், யமஹா நிறுவனம் சில முக்கிய மாற்றங்கள் செய்துள்ளது.

யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிளில், விலை உயர்ந்த மிச்செலின் அல்லது பிரெல்லி டயர்களுக்கு பதிலாக எம்ஆர்எஃப் டயர்களை பொருத்தியுள்ளது.

மேலும், இந்தியாவிற்கான யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிள் மாடலில், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இது கேடிஎம் டியூக் 390, பெனெல்லி டிஎன்டி300 மற்றும் விரைவில் வெளியாக உள்ள பஜாஜ் வீஎஸ்400 ஆகிய மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் சுமார் 2.75 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்?

யமஹா எம்டி 03 மாடல்... சமீபத்தில் வந்த ஆர்3 பைக்கின் நேக்டு ஸ்டைல் மாடல்!

யமஹா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Yamaha has decided to launch their MT-03 Motorcycle in India, during this Diwali. Yamaha MT-03 is the naked version of Yamaha R3, which was earlier launched in India. Yamaha MT-03 has an upright riding position, even though it is based on the R3. Yamaha MT-03 will be priced around Rs 2.75 lakh in India. It was showcased at 2016 Delhi Auto Expo. To know more, check here...
Story first published: Friday, August 26, 2016, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X