யமஹா எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் ஆய்வுகளுக்காக இந்தியாவில் இறக்குமதி

By Ravichandran

யமஹா எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக், ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இந்தியாவில் இறக்குமதி செய்யபட்டுள்ளது.

யமஹா எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவிற்கு இறக்குமதி;

இந்தியாவிற்கு இறக்குமதி;

யமஹா மோட்டார்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் யமஹா எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கில் சிலவற்றை, இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளனர்.

இந்த பைக், தற்போது ஐரோப்பாவில் மிகவும் பிரபலமாக இருப்பதால், தற்போது ஐரோப்பா கண்டத்தில் மட்டும் விற்பனை செய்யபட்டு வருகிறது.

இது வரை, இந்த பைக் இந்தியாவிற்குள் எதற்கு இறக்குமதி செய்யபட்டிருக்கலாம் என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.

ஆர் அண்ட் டி?

ஆர் அண்ட் டி?

யமஹா எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளை ஆய்வுப் பணிகளுக்காக இறக்குமதி செய்திருக்கலாம் என யூகிக்கபடுகிறது.

இதோடு மட்டுமல்லாமல், தரநிலை அளவீடுகளுக்காக வேறு பல நிறுவனங்களும் இந்த யமஹா எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை இறக்குமதி செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகிறது.

இந்தியாவிற்கு வருமா?

இந்தியாவிற்கு வருமா?

யமஹா நிறுவனம், இந்த எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யும் எண்ணத்தில் இல்லை. இதற்கு காரணம், இந்த பைக்கை இந்தியாவிற்குள் கொண்டு வந்தால், அது லாபகரமாக இருக்காது என யமஹா நிறுவனம் கருதுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

யமஹா எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக், 124.7சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 14.79 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 12.4 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

யமஹா எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

யமஹா எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கின் முன் சக்கரத்திற்கும், பின் சக்கரத்திற்கும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தபட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா;

ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா;

சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், யமஹா தங்கள் நிறுவனத்தின் எம்டி-09 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை காட்சிபடுத்தியது.

வருங்கால அறிமுகங்கள்;

வருங்கால அறிமுகங்கள்;

யமஹா தங்கள் நிறுவனத்தின் சார்பாக, இந்திய வாகன சந்தைகளில் எம்டி-15 அல்லது எம்டி-03 மாடலை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எம்டி-15 மற்றும் எம்டி-03 பைக்குகள், ஒய்இசட்எஃப்-ஆர்15, ஒய்இசட்எஃப்-ஆர்3 ஆகிய மாடல்களின் நேக்கட் வெர்ஷன்களாகும்.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம், யமஹா எம்டி-125 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் நோக்கத்தில் இல்லை.

மாறாக, யமஹா எம்டி-125 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை இந்தியாவில் தயாரித்து, உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

யமஹா எம்டி-09 பைக் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்

யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்?

யமஹா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Yamaha Motors has imported some of their MT-125 streetfighter motorcycle to India. At present, the model is sold only in European markets, as 125cc motorcycles are popular there. Yamaha is not looking at launching the MT-125 model in India. Yamaha could be manufacturing the MT 125 motorcycle in India and exporting to other markets.
Story first published: Tuesday, March 1, 2016, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X