யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக் புக்கிங் மீண்டும் துவக்கம்

Written By:

யமஹா நிறுவனம் தயாரிக்கும் யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக் புக்கிங் இந்தியாவில் மீண்டும் துவங்கியுள்ளது. சமீப காலமாக, சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் சூப்பர்பைக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், இந்திய வாகன சந்தைகளில் வாடிக்கையாளர்களின் புக்கிங் மீண்டும் ஏற்கப்படும் யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

லிமிட்டெட் எடிஷன்;

லிமிட்டெட் எடிஷன்;

ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் தயாரிக்கும் ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக், லிமிட்டெட் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இதன் புக்கிங் இந்தியாவில் மீண்டும் துவங்கியுள்ளது. இதனை புக்கிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஃபிப்ரவரி 28, 2017 வரை ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிங் முறை;

புக்கிங் முறை;

இந்த யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக்கின் புக்கிங் ஆன்லைனில் ஏற்கப்பட்டு வருகிறது.

ரேசிங் பேக்கேஜ்;

ரேசிங் பேக்கேஜ்;

யமஹா நிறுவனம், இந்த ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக்கை ரேசிங் எக்ஸ்பீரியன்ஸ் பேக்கேஜ் உடன் அளிக்கின்றனர்.

சிறப்பு நிகழ்ச்சிகள்;

சிறப்பு நிகழ்ச்சிகள்;

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக் அறிமுகம் தொடர்பாக முகெல்லோ மற்றும் சில்வர்ஸ்டோன் ஆகிய இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த 2015 நிகழ்ச்சியில், ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக் உரிமையாளர்கள் தங்களின் சூப்பர்பைக்குகளை டிராக்கில் ஓட்டி மகிழ்ந்தனர். முன்னாள் மோட்டோஜிபி ரைடர் கோளின் எட்வார்ட்ஸ் இந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்தார்.

ஒர்க்ஷாப்;

ஒர்க்ஷாப்;

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக்கை வாடிக்கையாளர்கள் மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள யமஹா நிறுவனம் ஒர்க்ஷாப்களையும் நடத்தினர். இதன் உரிமையாளர்கள், இந்த லிமிட்டெட் எடிஷன் சூப்பர்பைக்கின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற அம்சங்களை எப்படி செட் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

2017-ஆம் ஆண்டிற்கு, யமஹா நிறுவனம், இந்த ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக்கின் கிராஃபிக்ஸ்களை மேம்படுத்தியுள்ளனர். முந்தைய மாடலோடு ஒப்பிடுகையில், இந்த புதிய யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக்கின் பெயின்ட் ஸ்கீம் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் உள்ளது.

தெளிவற்ற நிலை;

தெளிவற்ற நிலை;

யமஹா நிறுவனம், 2017-ஆம் ஆண்டிற்கு எத்தனை யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக்குகளை தயாரிக்க உள்ளது என இதுவரை தெளிவாக குறிப்பிடவில்லை.

விலை;

விலை;

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக்கின் விலை, முந்தைய லிமிட்டெட் எடிஷன் மாடலை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்ரே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக்கை வாங்க, வாடிக்கையாளர்கள், 19,399 பவுண்ட்கள் அல்லது இந்திய மதிப்பில் 15.83 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, யமஹா நிறுவனம், இந்த யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக்கை தங்களின் 2017 யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர்பைக் புக்கிங் பட்டியலில் இந்தியாவை சேர்க்கவில்லை.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

காக்கா தோஷம்... புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்கிய கர்நாடக முதல்வர் சித்தராமையா!

கப்பல் போக்குவரத்து துறை பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

ஹோண்டா அமேஸ் வேண்டவே வேண்டாம்... நொந்து போன வாடிக்கையாளரின் நூதன பிரச்சாரம்!

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha is now accepting Bookings for 2017 R1M via Online Service. YZF-R1M was limited edition superbike which was introduced by Yamaha. Potential buyers can register their interest in the YZF-R1M up until February 28, 2017. Yamaha offers YZF-R1M with Racing Experience package. Yamaha has not revealed number of YZF-R1M examples it will produce in 2017. To know more, check here...
Story first published: Saturday, October 15, 2016, 7:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark