யமஹா மற்றும் சாம்சங் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கிய ஸ்மார்ட் விண்ட்ஷீல்ட் கான்செப்ட்

By Ravichandran

யமஹா மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இணைந்து, பைக்குகளுக்கு என ஸ்மார்ட் விண்ட்ஷீல்ட் கான்செப்ட் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

யமஹா நிறுவனம், மொபைல் உற்பத்தி செய்யும் நிறுவனமான சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் புதிய தயாரிப்பை வடிவமைத்து வருகின்றனர். இந்த ஜப்பானிய இரு சக்கர தயாரிப்பு நிறுவனமான யமஹா, தென் கொரிய நிறுவனமான சாம்சங் உடன் சேர்ந்து, முதன் முதலாக பைக்குகளுக்கு என பிரத்யேக ஸ்மார்ட் விண்ட்ஷீல்ட் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த ஸ்மார்ட் விண்ட்ஷீல்ட் தொழில்நுட்பம் வருங்காலத்திற்கான முன்னோட்டமாக உள்ளதே தவிர, இது இன்னும் கான்செப்ட் நிலையில் தான் உள்ளது.

yamaha-samsung-smart-windshield-concept-for-bikes

சாம்சங் நிறுவனத்தின் வல்லுநர்களால் உருவாக்கபட்டுள்ள இந்த ஸ்மார்ட் விண்ட்ஷீல்ட் தொழில்நுட்பத்தை, யமஹாவின் டிரைசிட்டி ஸ்கூட்டரில் பிரயோகித்து பார்க்கபட்டது. இந்த தொழில்நுட்பம் வயர்களே (கம்பிவடம்) இல்லாமல் மொபைல் ஃபோனுடன் இந்த ஸ்கூட்டரை இணைக்கிறது. ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே சிஸ்டம் மூலம் வெவ்வேறு விதமான அறிவிப்புகளை (நோடிஃபிகேஷன்) படித்து அல்லது பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வாகனம் இயக்கும் போது, மொபைல்ஃபோன்களை உபயோகிப்பது மிகவும் ஆபத்தான விஷயம் ஆகும். சாம்சங் மற்றும் யமஹா மூலம் உருவாக்கபட்டுள்ள இந்த வருங்கால நோக்குடைய தொழில்நுட்பத்தை பார்த்தால், வியக்க வைக்கும் வகையில் உள்ளது. ஆனால், சாம்சங் மற்றும் யமஹா ஆகிய 2 நிறுவனங்களுமே, இந்த தொழில்நுட்பம் விரைவில் வெகுஜன பயன்பாட்டிற்கு வராது என அறிவித்துள்ளன.

Most Read Articles
English summary
Japanese Automobile giant Yamaha and Korean manufacturer Samsung has created very first Smart Windshield for bikes. Tricity scooter by Yamaha was used to study possibility of Smart Windshield by Samsung developers. This technology is still in its concept stage. Samsung, Yamaha confirmed that, Smart Windshield will not go into production anytime soon. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X