சென்னையில் யமஹா நிறுவனத்தின் புதிய உதிரி பாகங்கள் மையம் திறக்கபட்டுள்ளது

By Ravichandran

யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தங்களின் புதிய உதிரி பாகங்கள் (ஸ்பேர் பார்ட்ஸ்) மையத்தை திறந்துள்ளனர்.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம், இந்தியாவில் தங்களின் ஆதிக்கத்தை வலுபடுத்தும் முயற்சிக்காக மேற்கொண்ட இந்த உதிரி பாகங்கள் மையம் திறக்கும் நடவடிக்கை, 58 கோடி ரூபாய் முதலீட்டில் செய்யபட்டுள்ளது.

சென்னையில் உள்ள இந்த உதிரி பாகங்கள் மையம், 30,000 சதுர மீட்டர் பரப்பளவில், யமஹா நிறுவனத்தின் உற்பத்தி மையத்திற்கு அருகிலேயே அமைக்கபட்டுள்ளது.

yamaha-spare-parts-centre-opened-chennai-in-tamil-nadu

இந்த திறப்பு விழாவின் போது, யமஹா மோட்டார்ஸ் இந்தியா குழுமத்தின் சேர்மேன் ஹிரௌகி ஃபிஜுட்டா பங்கேற்றார். மேலும், மிட்சுய் அண்ட் கோ, சுமிமோட்டோ மிட்சுய் கன்ஸ்ட்ரக்‌ஷன் இந்தியா லிமிடெட் மற்றும் டிரான்ஸ்சிஸ்டம் லாஜிஸ்டிக் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவன உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தற்போது, யமஹா இந்தியா நிறுவனத்திற்கு இந்தியாவில் 2 உதிரி பாகங்களுக்கான மையங்கள் உள்ளது. ஒரு உதிரி பாகங்களுக்கான மையம், வடக்கில் சூரஜ்பூர் என்ற இடத்திலும், மற்றொரு உதிரி பாகங்களுக்கான மையம், தெற்கில் சென்னையிலும் உள்ளது. சீறான உதிரி பாகங்களுக்கான இன்வெண்ட்ரி மூலம், விரைவான இடைவெளியில், குறைவான விலையிலும், உயர் தரத்திரான உதிரி பாகங்கள் வாடிக்கையாளர்களை சென்றடவதை உறுதி செய்யபடுகிறது.

yamaha-spare-parts-centre-opened-chennai-in-tamil-nadu

ஆர்டர்கள் பெறப்படும் அடுத்த நாளே, உதிரி பாகங்கள் டெலிவரி செய்யபடும். யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், 15 மாநிலங்களில் 20 உதிரி பாகங்கள் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் கொண்டுள்ளது. இதனால், டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், இந்தியா முழுவதும் 3,000 உதிரி பாகங்களின் ரீடெய்லர்கள் மூலம் ஒரிஜினல் உதிரி பாகங்களை பெற முடியும்.

Most Read Articles
English summary
Yamaha Motors India inaugurated an all-new Spare Parts Centre in Tamil Nadu, Chennai. An investment of Rs. 58 crore was done by Japanese-based manufacturer for this centre. This Spare Parts Centre is spread across 30,000 sq. mts. and it is located very close to Yamaha India's manufacturing unit. To know more about Spare parts centre by Yamaha, check here...
Story first published: Friday, April 29, 2016, 19:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X