புதிய ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம் - முழு விபரம்!

Written By:

புதுப்பொலிவுடன் புதிய ஹோண்டா ஷைன் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ஷைன் பைக்கில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

விரைவில் அமலுக்கு வர இருக்கும் புதிய விதிமுறைகளுக்கு தக்கவாறு, புதிய ஹோண்டா ஷைன் பைக் இப்போது பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு சிறப்பம்சம் கொண்டதாக வந்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட 124.73சிசி எஞ்சின் இப்போது 10.16 பிஎச்பி பவரையும், 10.30 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

புதிய ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹோண்டா ஷைன் பைக்கில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. வண்டியை ஸ்டார்ட் செய்தது முதல் எஞ்சினை ஆஃப் செய்யும் வரை இந்த ஹெட்லைட் ஒளிர்ந்து கொண்டிருக்கும். இது புதிய பாதுகாப்பு வசதியாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹோண்டா ஷைன் பைக்கில் கவர்ச்சியை கூட்டும் விதத்தில் சில கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கார்புரேட்டர் மற்றும் புகைப்போக்கி குழாய்க்கு க்ரோம் பூச்சு கவர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

புதிய ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹோண்டா ஷைன் பைக்கில் ட்யூப்லெஸ் டயர்களும், டிரம் பிரேக் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது. முன்புறத்தில் 240மிமி டிஸ்க் பிரேக் கொண்ட மாடலிலும், சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கும்.

புதிய ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹோண்டா ஷைன் பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 5 விதமான நிலைகளில் மாற்றிக் கொள்ளக்கூடிய ட்யூவல் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் 157மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டுள்ளது. புதிய ஹோண்டா ஷைன் பைக்கில் 10.3 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

புதிய ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹோண்டா ஷைன் பைக் கருப்பு, பழுப்பு, நீலம், வெள்ளை மற்றும் இரண்டு விதமான சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும். ஸ்கடிக்கர் டிசைனும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா ஷைன் பைக் பிரேக் சிஸ்டம் அடிப்படையில் மூன்று மாடல்களில் கிடைக்கும். அதன் விபரங்களை கீழே உள்ள விலைப்பட்டியலில் பார்க்கலாம்.

மாடல் விபரம் எக்ஸ்ஷோரூம் விலை[டெல்லி]
டிரம் பிரேக் மாடல் ரூ.55,799
டிஸ்க் பிரேக் மாடல் ரூ.58,125
சிபிஎஸ் பிரேக் மாடல் ரூ.61,047

புதிய யமஹா FZ25 பைக்கின் படங்கள்!

இளைஞர்களை சுண்டி இழுத்து வரும் யமஹாவின் புதிய FZ250 பைக்கின் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Honda has launched the 2017 CB Shine with the BS-IV compliant engine, Automatic Headlamp On(AHO0 and cosmetic updates.
Please Wait while comments are loading...

Latest Photos