புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் 2017 ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பல மாத தாமதத்திற்கு பின்னர், புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பழைய மாடலைவிட சில மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய ஹோண்டா சிபிஆர் பைக் நாடு முழுவதும் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் விங் வேர்ல்டு என்ற பிரிமியம் டீலர்ஷிப்புகள் வாயிலாக மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கில் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சைடு பேனல்களின் அளவு குறைக்கப்பட்டு இருப்பதால், இப்போது எஞ்சின் கேஸ் அதிகம் வெளியில் தெரிகிறது.

Recommended Video
Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இருக்கை உயரமும் 13மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், ஓட்டுனர் மிக சொகுசாகவும், லாவகமாகவும் அமர்ந்து ஓட்டுவதற்கான வாய்ப்பு கிட்டும். புகைப்போக்கி மஃப்ளரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், புகைப்போக்கி சப்தம் மிக அலாதியாக இருக்கும் என கருதலாம்.

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கில் புதிய 41மிமீ ஷோவா டியூவல் பென்டிங் வால்வ் கொண்ட ஃபோர்க்குகள் முன்புறத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பின்புறத்தில் 7 ஸ்டேஜ் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோஷாக் அப்சார்பர் உள்ளது. அலுமினியம் ஸ்விங்ஆர்ம் சிறந்த நிலைத்தன்மையை வழங்கும் என்கிறது ஹோண்டா.

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கின் மிக முக்கிய மாற்றம், பிஎஸ்-4 எஞ்சினுடன் வந்துள்ளது. வெளிநாடுகளில் விற்பனையாகும் மாடல் 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஆனால், இந்தியாவிற்கான ஹோண்டா சிபிஆர் 650எஃப் மாடல் அதிகபட்சமாக 86 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் மாடலானது மில்லெனியம் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் ஆகிய இரண்டு வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் ரூ.7.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. கவாஸாகி நின்ஜா 650, பெனெல்லி டிஎன்டி 600ஜிடி உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

English summary
2017 Honda CBR650F Launched In India.
Story first published: Tuesday, October 10, 2017, 17:33 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos