அட்வெஞ்சர் மாடலான யமஹா 2017 எம்டி-10 டூரர் பைக் விரைவில் அறிமுகம்!

Written By:

நெடுந்தூர பயணத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட '2017 எம்டி-10 டூரர்' பைக்கினை வரும் மார்ச் மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்துகிறது யமஹா நிறுவனம். இந்த பைக் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹாவின் புதிய 2017 எம்டி-10 டூரர் பைக் விரைவில் அறிமுகம்!

இருசக்கர வாகணங்களில் நெடுந்தூர பயணம் மேற்கொள்வதை இன்று பலரும் பெரிதும் விரும்புகின்றனர். இதற்கென பிரத்யேக வடிவமைப்பு கொண்ட பைக்குகளை யமஹா நிறுவனம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

யமஹாவின் புதிய 2017 எம்டி-10 டூரர் பைக் விரைவில் அறிமுகம்!

இந்நிலையில், டூரிங் அனுபவத்தை மேலும் பரவசமாக்கும் வகையில் புதிய ‘2017 எம்டி-10 டூரர்' பைக்கினை ஐரோப்பிய சந்தையில் யமஹா அறிமுகப்படுத்த உள்ளது. இது எம்டி-நேக்கட் ஸ்போர்ட் பைக் மற்றும் யமஹா டெனர் டூயல் பர்பஸ் டூரர் ஆகிய பைக்குகளின் கலவையாக வெளிவர உள்ளது.

யமஹாவின் புதிய 2017 எம்டி-10 டூரர் பைக் விரைவில் அறிமுகம்!

புதிய 2017 எம்டி-10 டூரர் பைக்கில், கைகளை காக்கும் ‘ஹேண்ட் கார்டுகள்', விண்ட் ஷீல்டு, சொகுசான பெரிய சீட், ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஸ்பிளே ஸ்கிரீன், பயண பொருட்கள் வைக்க இடம் ஆகிய சிறப்புகளோடு பாதுகாப்பை பலப்படுத்தும் ‘ஏபிஎஸ்' பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

யமஹாவின் புதிய 2017 எம்டி-10 டூரர் பைக் விரைவில் அறிமுகம்!

ஸ்போர்ட்ஸ் மாடலான யமஹா ஆர்-1 பைக்கில் உள்ளதைப்போன்று, புதிய 2017 எம்டி-10 டூரர் பைக்கில் வலிமையான 998சிசி கிராஸ் பிளேன் எஞ்சின் உள்ளது, இது அதிகபட்சமாக 158 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

யமஹாவின் புதிய 2017 எம்டி-10 டூரர் பைக் விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கில் இலகுவான பயணத்திற்கென 3 ரைடிங் மோட்கள் தரப்பட்டுள்ளது. ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் ஆகிய சிறப்பு வசதிகளும் உள்ளன.

யமஹாவின் புதிய 2017 எம்டி-10 டூரர் பைக் விரைவில் அறிமுகம்!

மேலும், பைக் வேகத்தை உடனடியாக குறைக்க உதவும் ஸ்லிப்பர் கிளட்ச், க்ரூஸ் கண்ட்ரோல், முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷனை மாற்றியமைக்கும் வசதி, கேஒய்பி இன்வர்டட் ஃபோர்க் ஆகியவை உள்ளன.

யமஹாவின் புதிய 2017 எம்டி-10 டூரர் பைக் விரைவில் அறிமுகம்!

முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட ‘எம்டி-09' பைக்குகளை இறக்குமதி செய்து தற்போது இந்தியாவில் விற்று வருகிறது யமஹா நிறுவனம். ஐரோப்பாவில் அறிமுகமான பின்னர் இந்த புதிய 2017 எம்டி-10 டூரர் பைக் இந்தியாவில் எந்நேரமும் அறிமுகமாகலாம்.

யமஹாவின் புதிய 2017 எம்டி-10 டூரர் பைக் விரைவில் அறிமுகம்!

இந்த புதிய 2017 எம்டி-10 டூரர் பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், டுகாடி மல்டிஸ்ட்ரடா, சுசுகி வி-ஸ்டார்ம், டிரயம்ப் டைகர் மற்றும் கவாசகி வெர்சிஸ் ஆகிய மாடல்களுக்கு கடும் போட்டியாக அமையும்.

அட்வெஞ்சர் மாடலான டுகாடி மல்டிஸ்ட்ரடா எண்டூரா பைக்கின் படங்கள்: 

English summary
Yamaha will be launching the Tourer avatar of the MT-10 in the European market in March. The motorcycle all the bells and whistles of a typical touring motorcycle.
Story first published: Tuesday, February 28, 2017, 12:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark