கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாறிய புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்!

Written By:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடந்த சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், நியோ ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் புதிய கஃபே ரேஸர் கான்செப்ட் பைக் மாடலை ஹோண்டா நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாறிய புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்!

இந்த கான்செப்ட்டின் கீழ் 3 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இத்தாலியில் துவங்கி உள்ள மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதில், புதிய ஹோண்டா சிபி1000ஆர் மோட்டார்சைக்கிள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Recommended Video
[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாறிய புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்!

தோற்றத்தில் நேக்கட் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறது புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக். ஹோண்டா நிறுவனத்தின் பிற நேக்கட் ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. குதிரை குளம்பு வடிவிலான எல்இடி ஹெட்லைட், அலுமினியம் ரேடியேட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாறிய புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்!

பின்புறத்தில் அகலமான டயர் பொருத்தும் வகையில், சக்கரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹேண்டில்பார் அமைப்பு உயர்த்தப்பட்டு இருப்பதுடன், இருக்கை அமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தினசரி பயன்பாட்டு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாறிய புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்!

புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர் பைக்கின் எஞ்சினும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இருந்த 998சிசி எஞ்சினின் போரில் மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது 145 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக மேம்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் கூடுதலாக 20 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லதாக மாறி இருக்கிறது.

கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாறிய புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்!

கியர் ரேஷியோவும் 4 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதும், ஆரம்ப நிலையில் பிக்கப் சிறப்பாக இருப்பதற்கு உதவும். மேலும், ஹோண்டா சிபி1000ஆர்ஆர் என்ற ரேஸ் மாடலைவிட இது மிக சிறப்பான பிக்கப்பை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாறிய புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்!

ஹோண்டாவின் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்கள் செயல்திறனில் சொதப்புவதாக மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் இருக்கும் பிம்பத்தை மாற்றும் வகையில், இலகு எடையுடன், அதிக சக்திவாய்ந்த மாடல்களாகவும் இந்த சிபி1000ஆர் பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாறிய புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்!

இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்டான்டர்டு, ஸ்போர்ட், ரெயின் மற்றும் யூசர் ஆகிய நான்குவிதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. ஓட்டுனரின் விருப்பத்திற்கு ஏற்ப எஞ்சின் இயக்கம், பிரேக் செயல்திறன் மற்றும் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை மாற்றம் செய்து கொள்ளும்.

கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாறிய புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்!

பின்புறத்தில் புதிய ஷாவோ சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகியவை முக்கிய தொழில்நுட்பங்கள். விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சி செய்திகள்!

English summary
2018 Honda CB1000R Revealed At EICMA.
Please Wait while comments are loading...

Latest Photos