உலகின் வேகமான 4 சிலிண்டர் 250சிசி பைக் தயாரிக்கும் கவாஸாகி

Written By:

1983ஆம் ஆண்டு முதல் முதலாக 250சிசி பைக்கான நிஞ்சாவை ஜப்பானில் அறிமுகப்படுத்தியது கவாஸாகி நிறுவனம். பின்னர், உலகிலேயே அதிவேகம் கொண்ட 250சிசி பைக்காக இசட்எக்ஸ்ஆர் 250 பைக்கையும் வெளியிட்டது கவாஸாகி. தற்போது 4 சிலிண்டர்கள் கொண்ட புதிய நிஞ்சா250சிசி பைக் தயாரிப்பில் கவாஸாகி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

விரைவில் உலகின் அதிவேக கவாஸாகி நிஞ்சா250 பைக்

இதற்கு முன்பே 4 சிலிண்டர்கள் கொண்ட 250சிசி பைக்குகளை கவாஸாகி நிறுவனம் தயாரித்திருந்தாலும், அப்போது இருந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக, அவை அதிகபட்சமாக 45 பிஹச்பி ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவையாக சிறுமைப்படுத்தப்பட்டன.

விரைவில் உலகின் அதிவேக கவாஸாகி நிஞ்சா250 பைக்

1980 - 1990 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இசட்எக்ஸ்ஆர் 250 சிசி பைக்குகளுக்கு பிறகு தற்போது மீண்டும், 4 சிலிண்டர்கள் கொண்ட 250 சிசி இஞ்சினை நிஞ்சா பைக்குக்காக தயாரிக்கிறது கவாஸாகி நிறுவனம்.

விரைவில் உலகின் அதிவேக கவாஸாகி நிஞ்சா250 பைக்

இந்த பைக்கில் தற்போதைய காலகட்ட தொழில்நுட்பங்களான ரைடு-ஃபை-வயர், ஃபியூயல் இஞ்ஜெக்‌ஷன் ஆகிய சிறப்பம்சங்கள் புகுத்தப்பட்டால், இத்தகைய அம்சங்கள் கொண்ட 4 சிலிண்டர் இஞ்சின் கொண்ட உலகின் ஒரே 250சிசி பைக் என்ற அரிய சிறப்பை இது பெறும்.

விரைவில் உலகின் அதிவேக கவாஸாகி நிஞ்சா250 பைக்

தற்போது இந்த செக்மெண்ட்டில் சிறந்து விளங்கும் ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக்கில், இரண்டு சிலிண்டர் இஞ்சின் உள்ளது, இது அதிகபட்சமாக் 31 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதுவே தற்போதைய அதிவேக 250சிசி மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது.

விரைவில் உலகின் அதிவேக கவாஸாகி நிஞ்சா250 பைக்

இந்நிலையில், 4 சிலிண்டர் இஞ்சினுடன் கூடிய புதிய நிஞ்சா250சிசி பைக்கை கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தும் பட்சத்தில், ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் மாடல் இதனுடன் கடுகளவுக்கு கூட போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் உலகின் அதிவேக கவாஸாகி நிஞ்சா250 பைக்

தற்போது இந்தியாவில் நிஞ்சா300 பைக் விற்பனையில் உள்ளது, இவை செயல்திறனில் சிறந்து விளங்கினாலும் வாங்கக்கூடிய விலையில் இவை இல்லை.

விரைவில் உலகின் அதிவேக கவாஸாகி நிஞ்சா250 பைக்

கேடிஎம் ட்யூக் வகை பைக்குகளின் விலை மற்றும் செயல்திறன் சிறந்து விளங்குவதால், இந்தியர்கள் பெரும்பாலும் நிஞ்சா பைக்குகளை விலை அடிப்படையில் விரும்புவதில்லை என்பதே உண்மை நிலவரமாகும்.

புதிதாக அறிமுகமான 2017 கேடிஎம் ஆர்சி390 பைக்கின் படங்கள்: 

English summary
Kawasaki could be working on a 250cc, four-cylinder motorcycle to take down competition like the Honda CBR250RR.
Story first published: Wednesday, March 8, 2017, 17:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark