மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஆர் 6 திறன், ஆற்றல், தொழில்நுட்பம்

Written By:

யமஹா நிறுவனத்தின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் வரிசையில் 1998ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் ஆர்6. 600சிசி திறனில் தயாரிக்கப்பட இந்த பைக், 2001, 2003, 2006 மற்றும் 2008ம் ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்ட மாடல்களாக வெளிவந்தன.

தற்போது இந்தாண்டில் தோற்றத்திலும், செயல்திறனிலும் மேலும் மேம்படுத்தப்பட்டு மாடலாக யமஹா ஆர் 6 பைக் வெளிவருகிறது. அதிலிருக்கும் முக்கிய அம்சங்களை குறித்து இங்கே பார்க்கலாம்.

பொலிவுட்டப்பட்ட பழைய எஞ்சின்

பொலிவுட்டப்பட்ட பழைய எஞ்சின்

1998ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுவரை வெளியான ஆர் 6 பைக்குகளில் யமஹா நிறுவனம் பயன்படுத்திய எஞ்சினைத்தான் மேம்படுத்தப்பட்ட புதிய ஆர் 6 பைக்கிலும் இடம்பெற்றுள்ளது.

600சிசி, இன்லைன் - ஃபோர் சிலிண்டர் தொழில்நுட்பம் உள்ள ஆர். 6 பைக்கின் எஞ்சினின் செயல்திறன் மற்றும் ஆற்றல் குறித்து இதுவரை யமஹா நிறுவனம் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

தோற்றம்

தோற்றம்

யமஹாவின் மற்றொரு பிரபல தயாரிப்பான ஆர்1 மோட்டார் சைக்கிளின் தோற்றத்தை வைத்தே புதிய ஆர்6 உருவாக்கபப்ட்டுள்ளது.

ஆர்.6 படங்கள் வெளியான பிறகு தற்போது இந்த பைக்கை, ஆட்டோமொபைல் உலகம் ஆர்1 மோட்டார் சைக்கிளின் தம்பி என அடையாளப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஆர்1 மோட்டார் சைக்கிளில் சிறப்பான தொழில்நுட்பமாக கவனிக்கப்பட்ட அதே காற்றியக்கவியல் (aerodynamics) தத்துவத்தை வைத்து தான் ஆர்6 பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும் இதில், பைக்கின் பின்பகுதியை பாதுகாக்கும் ஷாக் அப்ஸார்பர், அலுமினியாத்தாலான எரிவாயு டாங்க், இழுவை கட்டுபாடு போன்ற புதிய தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆர்6 1999 முதல் ...

ஆர்6 1999 முதல் ...

1998ம் ஆண்டில் அமெரிக்காவில் யமஹா ஆர்6 வெளியிடப்பட்டது. இருசக்கர வாகனங்களுக்கான போட்டிகளில் அனைத்து போட்டியாளர்களும் விரும்பும் ஒரே மாடலாக ஆர் 6 பைக்குகள் வலம் வந்தன.

அமெரிக்காவில் மட்டும் விற்பனையான ஆர் 6 பைக்குகளை கணக்கெடுத்தால் மயக்கமே வந்துவிடும். இதுவரை அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,53,000 ஆர் 6 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உலகளவில் இதனுடையை விற்பனை 3,89,000 அளவில் உள்ளன.

சீறும் சுறுசுறுப்பு கொண்ட புதிய ஆர்6

சீறும் சுறுசுறுப்பு கொண்ட புதிய ஆர்6

2017 ஆர் 6 பைக்குகள் அதிகவேகத்தில் செல்லும்போது, ஓட்டுவதற்கு கடினமாக உணராத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டார் சைக்கிளின் ஃபோர்க்குகள் பழைய மாடல்களை விட 3 மிமீ அதிகமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிக நீளம் கொண்ட ஃபோர்க்குகள் காரணமாக, சாலைகளில் வேகமாக திரும்பும் போதும், வளையும் போதும் நம்பகத்தனமான டிரைவிங்கை ரைடர்கள் உணர்வர்.

ரேஸ் டிராக்குகளில் சீறிப் பாய்ந்த ஆர் 6

ரேஸ் டிராக்குகளில் சீறிப் பாய்ந்த ஆர் 6

உலகிலுள்ள அனைத்து ரேஸ் டிராக்குகளிலும் யமஹா ஆர்6 ஆதிக்கம் செலுத்தியது. அதற்காக யமஹா நிறுவனமும் கடுமையான தொழில்நுட்பங்களை கொண்டு ஆர் 6 மோட்டார் சைக்கிளை தொடர்ந்து தயாரித்து வந்தது.

அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள்களுக்காக நடைபெற்ற 58 சூப்பர் ஸ்போர்ட் மற்றும் சூப்பர்ஸ்டாக் போட்டிகளில், 56 முறை சாம்பியன் பட்டத்தை யமஹா ஆர் 6 வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பைக்கின் எடை

பைக்கின் எடை

அலுமினியத்தால் ஆன எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது காரணமாக யமஹா 2017 ஆர் 6 பைக்கின் எடை மிகவும் குறைந்துள்ளது. சூப்பர் ஸ்போர்ட் மாடலில் தயாரிகியுள்ளதால் இதன் எடை ஒரு பெரிய விவாதமாக ஆட்டோமொபைல் உலகில் மாறியுள்ளது.

எடையை குறித்து, ஏன் பொறியாளர்கள் இப்படியொரு முடிவை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. எஞ்சினின் உலோகம் தான் மாறியுள்ளதே தவிர, செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் யமஹா ஆர் 6 மீது வைக்கப்படும் விமர்சனமாக உள்ளது.

பெரிய பிரேக்குகள் கொண்ட ஆர்6

பெரிய பிரேக்குகள் கொண்ட ஆர்6

வண்டியை நிறுத்துவதற்காக பைக்கின் முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் டிஸ்க், 320 மிமீ அளவில் பொருத்தப்பட்டுள்ளது.

வண்டியில் உள்ள ஆண்டி பிரேக் சிஸ்டம் எப்போதும் செயல்பாட்டிலே இருக்கும், அதை அணைக்கவே முடியாது என்பது புதிய ஆர்6 பைக்கின் சிறபம்சம்.

எடை குறைந்த டயர்கள்

எடை குறைந்த டயர்கள்

ஆர் 6 பைக்கில் பிரிஜெஸ்டோன் நிறுவனம் S21 மாடல் டயர்களை பொருத்தியுள்ளன. இந்த மாடல்கள் சாதரணமாக உருவாக்கப்படும் டயர்களை விட 800 கிராம் குறைந்த எடையை கொண்டது.

யமஹா ஆர் 6 மோட்டார் சைக்கிளின் எடை குறைய இதுவும் ஒரு காரணம்.

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஆர் 6

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஆர் 6

யமஹாவின் புதிய மேம்படுத்தப்பட்ட ஆர் 6 மோட்டார் சைக்கிள் முற்றிலும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இயங்கும் யமஹா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த பைக்கை டிசைன் செய்த பிறகு சில வாடிக்கையாளர்களிடம் காட்டியுள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் புதிய யமஹா ஆர் 6 பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

English summary
The 2017 Yamaha R6 gets fresh new design and a host of electronics. Here are the 8 things you didn't know about the new R6.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark