ரூ.2.5 லட்சம் பட்ஜெட்டிற்குள் ஏபிஎஸ் பிரேக்குடன் கிடைக்கும் டாப்-5 பைக் மாடல்கள்!

Written By:

2018 ஏப்ரல் முதல் 150சிசி-க்கு மேல் திறன் கொண்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களும் ஏபிஎஸ் பிரேக் அமைப்புடன் தயாரிக்கப்படவுள்ளது ( Antilock Braking System). மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு இணங்க பெரும்பாலான பைக் தயாரிப்பு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், எல்லாருக்கும் ஏற்ற பட்ஜெட்டில் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் ஏ.பி.எஸ் அமைப்பை கொண்ட மோட்டார் சைக்கிள்களை குறித்து பார்க்கலாம்.

டி.வி.எஸ். அப்பாச்சி ஆர்.டி.ஆர் 180 ஏ.பி.எஸ்

டி.வி.எஸ். அப்பாச்சி ஆர்.டி.ஆர் 180 ஏ.பி.எஸ்

ஏ.பி.எஸ் பிரேக் தொழில்நுட்பத்தில், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற விலையில் தயாரிக்கப்பட்டுள்ள பைக் டி.வி.எஸ். அப்பாச்சி ஆர்.டி.ஆர் 180 .

177.4 சிசி எஞ்சினைக் கொண்டுள்ள இந்த பைக், 15.5 என்.எம் டார்க் திறன் கொண்டது. மேலும் இதே மாடலில் ஏ.பி.எஸ் தொழில்நுட்பம் இல்லாத மோட்டார் சைக்கிளும் தாயாரிக்கப்பட்டுள்ளது.

ஏ.பி.எஸ் பிரேக்குடன் தோதான விலையில் டாப் 5 பைக்குகள்!

டி.வி.எஸ். நிறுவனத்தின் பெருமைமிகு தயாரிப்பாக ஏபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய அப்பாச்சி ஆர்.டி.ஆர் ஏபிஎஸ் மோட்டார் சைக்கிளின் ரூ. 90,757 விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200

இந்திய இளைஞர்களுக்கு என்றும் பிடித்தமான பல்சர் சீரிஸில் புதிய தயாரிப்பாக வெளியாகவுள்ள பைக் ஆர்.எஸ். 200. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட இந்த பைக் சுற்றுச்சுழலுக்கு கேடுவிளைவிக்காத பி.எஸ் 4 எஞ்சினையும் கொண்டுள்ளது.

ஏ.பி.எஸ் பிரேக்குடன் தோதான விலையில் டாப் 5 பைக்குகள்!

199.5 சிசி-ல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள், 18.6 என்.எம் டார்க் திறனை வழங்கும். ஏபிஎஸ் உடன் கூடிய முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டு பல்சர் ஆர்.எஸ். 200 தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏ.பி.எஸ் பிரேக்குடன் தோதான விலையில் டாப் 5 பைக்குகள்!

ஏபிஎஸ் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மோட்டார் சைக்கிளின் முன்பகுதிக்கான பிரேக் 300 மிமீ அளவிலும் மற்றும் பின் பகுதிக்கான பிரேக் 230 மிமீ அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 மாடலின் விலை ரூ. 1,34,000 ஆகும்.

பல்சர் ஆர்.எஸ். 200 மாடலை தொடர்ந்து மேலும் ஒரு மாடலை ஏபிஎஸ் சிஸ்டத்துடன் பஜாஜ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

பஜாஜ் டோமினார்

பஜாஜ் டோமினார்

பஜாஜ் நிறுவனத்தின் அடுத்த ஏபிஎஸ் தொழில்நுட்பத்திற்கு கீழ் வெளிவரவுள்ள மோட்டார் சைக்கிள், பஜாஜ் டோமினார். 373.3 சிசியில் இயங்கும் இந்த பைக்கின் எஞ்சின், 35 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஏ.பி.எஸ் பிரேக்குடன் தோதான விலையில் டாப் 5 பைக்குகள்!

பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கில் இருக்கக்கூடிய அதே பிரேக் அமைப்புகளை தான் பாஜாஜ் டோமினோரும் பெற்றுள்ளது. இந்த பைக்கின் செயல்திறன் குறித்து நல்ல கருத்துகள் இந்திய ஆட்டோமொபைல் உலகில் எழுந்து வரும் வேளையில், வண்டியின் மீது மக்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

எதிர்பார்ப்பு மற்றும் செயல்திறனுக்கு ஏற்றார் போல டோமினார் பைக்கின் விலை ரூ.1,50,000 என பஜாஜ் அறிவித்துள்ளது.

ஏ.பி.எஸ் பிரேக்குடன் தோதான விலையில் டாப் 5 பைக்குகள்!

மேலும் ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட பைக்குகள் இந்தியாவின் விற்பனை வர தொடங்கினால், பஜாஜ் டோமினோர் தான் விமுதலிடத்தில் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக வரவேற்பு பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா CBR 250 R

ஹோண்டா CBR 250 R

நீண்ட பயணங்களுக்கு ஏற்றவாறான பைக் என்றால், இன்றும் அது ஹோண்டா CBR 250 R மோட்டார் சைக்கிள் தான். 2 லட்சத்திற்கு கீழ் அனைத்து வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஒருங்கே பெற்ற ஒரே வண்டியாக உள்ளது.

249.6-சிசி திறனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், பல்சர் ஆர்.எஸ். 200 மாடலுக்கு சற்றும் சலிக்காத வகையில் பிரேக் அமைப்புகளை பெற்றுள்ளது. முன் பகுதிக்கான பிரேக் 296 மிமீ அளவிலும், பின் பகுதியின் 220 மிமீ அளவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏ.பி.எஸ் பிரேக்குடன் தோதான விலையில் டாப் 5 பைக்குகள்!

ஏபிஎஸ் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்ட மாடலில் வெளிவரும் புதிய ஹோண்டா CBR 250 R, இந்திய மார்கெட்டில் ரூ. 1,89,982க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கே.டி.எம் 390 டியூக்

கே.டி.எம் 390 டியூக்

எல்லா தரப்பினரும் வாங்கும் திறன் கொண்ட ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட வண்டிகளில், இறுதியாக நாம் பார்க்கும் மாடல் கே.டி.எம் 390 டியூக்.

ஏ.பி.எஸ் பிரேக்குடன் தோதான விலையில் டாப் 5 பைக்குகள்!

ஏபிஎஸ் தொழில்நுட்பத்தில் இன்னும் பல மாடல்களை கே.டி.எம் பைக் வரிசையில் உள்ளது. இருந்தாலும், ரு. 2,26,000 விலையில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த பைக் , நீண்ட தூர பயணம், தினசரி பயன்பாடு என எல்லாவற்றிருக்கும் நாம் பயன்படுத்தலாம்.

ஏ.பி.எஸ் பிரேக்குடன் தோதான விலையில் டாப் 5 பைக்குகள்!

நமது பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு, எதிர்பார்க்கக்கூடிய அனைத்து தொழில்நுட்ப வசதிகளை பெற்ற மோட்டார் சைக்கிள்களுக்கான் பட்டியலை தெரிந்துக்கொண்டோம்.

சாலை பாதுகாப்பு கருதி ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருப்பது, விபத்துக்களை குறைக்க உதவும் என நம்பலாம்.

மேலும்... #டாப் 5 #top 5
English summary
While ABS will be mandatory in bikes above 150cc by April 2018, most manufacturers are scrambling to get their bikes to conform with the upcoming regulations. But here are 5 bikes that already come equipped with ABS. Let's start with the most affordable one then.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark