அப்ரிலியா எஸ்ஆர்150 ரேஸ் எடிசன் மாடல் அறிமுகம்... பவர்ஃபுல் ஸ்கூட்டர்!

Written By:

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அப்ரிலியா பிராண்டில் சரியான விலையில் வந்ததால், இளைஞர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

அப்ரிலியா எஸ்ஆர்150 ரேஸ் எடிசன் மாடல் அறிமுகம்

இந்த நிலையில், இந்த ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அப்ரிலியா எஸ்ஆர்150 ரேஸிங் எடிசன் என்ற பெயரில் இந்த மாடல் வந்துள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர்150 ரேஸ் எடிசன் மாடல் அறிமுகம்

மோட்டோ ஜீபி பந்தயங்களில் பயன்படுத்தப்படும் பைக்குகளில் உள்ள வர்ணக் கலவையை போன்ற ஸ்பெஷல் ஸ்டிக்கருடன் அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த ஸ்கூட்டரின் முக்கிய ஸ்பெஷல். இதனால், சாதாரண மாடலில் இருந்து வெகுவாக வேறுபடுகிறது.

அப்ரிலியா எஸ்ஆர்150 ரேஸ் எடிசன் மாடல் அறிமுகம்

இந்த ஸ்கூட்டரில் சிவப்பு வண்ண அலாய் வீல்கள், முன்சக்கர பிரேக்கில் தங்க நிற காலிபர் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் சிவப்பு வண்ண சஸ்பென்ஷன் ஸ்பிரிங் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அப்ரிலியா எஸ்ஆர்150 ரேஸ் எடிசன் மாடல் அறிமுகம்

இந்த ஸ்கூட்டரில் 154.4சிசி எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 10 பிஎச்பி பவரையும், 11.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனையும் பெற்றிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் எஞ்சினில் சிறிய மாறுதல்களுடன் விரைவான பிக்கப்பை தரும் வகையில், மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

அப்ரிலியா எஸ்ஆர்150 ரேஸ் எடிசன் மாடல் அறிமுகம்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் உள்ளது. மேலும், 14 இன்ச் அலாய் வீல்கள், முன்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 140மிமீ டிரம் பிரேக்கும் உள்ளது. கருப்பு- சிவப்பு வண்ணத்திலான இருக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அப்ரிலியா எஸ்ஆர்150 ரேஸ் எடிசன் மாடல் அறிமுகம்

சாதாரண அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் ரூ.65,000 விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் ரூ.70,288 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அப்ரிலியா பிராண்டு பிரியர்களையும், மோட்டோஜீபி பைக் பந்தய ரசிகர்களையும் இந்த மாடல் வெகுவாக கவரும்.

புதிய டாடா டிகோர் கான்செப்ட் செடான் காரின் படங்கள்!

அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டாடா கைட்-5 [டிகோர்] செடான் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Aprilia SR 150 race edition launched in India. The new SR 150 Race receives mechanical and cosmetic updates.
Story first published: Thursday, February 9, 2017, 16:53 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos