பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!!

Written By:

பஜாஜ் சிடி100 மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!!

பட்ஜெட் ரக பைக்குகளில் பஜாஜ் சிடி100 மற்றும் பஜாஜ் பிளாட்டினா ஆகிய இரு மாடல்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன.

அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு போன்ற அம்சங்களுடன், விலை குறைவான பைக் மாடல்களாக இருக்கின்றன.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வாய்ப்பு தரும் வகையில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!!

பஜாஜ் சிடி100 இஎஸ் அலாய் மற்றும் பஜாஜ் பிளாட்டினா இஎஸ் ஸ்போக் என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட்டுகள் விற்பனைக்கு கிடைக்கும்.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!!

பஜாஜ் சிடி100 இஎஸ் அலாய் வேரியண்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியும், அலாய் வீல்களுடன் கிடைக்கும். இது அதிக விலை கொண்ட சிடி100 வேரியண்ட்டாக விற்பனைக்கு வந்துள்ளது.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Expert Review Of Tata Nexon - DriveSpark
பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!!

அதேபோன்று, பஜாஜ் பிளாட்டினா பைக்கில் ஸ்போக் வீல்களுடன் கூடிய புதிய மாடல் வந்துள்ளது. இந்த மாடலில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி உள்ளது. இந்த மாடல் பிளாட்டினா பைக்கின் மிக குறைவான விலை மாடலாக விற்பனை செய்யப்படும்.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!!

புதிய பஜாஜ் பிளாட்டினா இஎஸ் ஸ்போக் வேரியண்ட் ரூ.42,650 எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள பஜாஜ் பிளாட்டினா அலாய் வீல் மாடல் ரூ.45,638 விலையில் கிடைக்கிறது. இதைவிட ரூ.3,000 வரை குறைவான விலையில் இந்த புதிய வேரியண்ட் வந்துள்ளது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!!

பஜாஜ் பிளாட்டினா பைக்கில் 102சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.1 பிஎச்பி பவரையும், 8.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!!

புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் அலாய் வேரியண்ட் ரூ.41,997 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். ஏற்கனவே விற்பனையில் உள்ள பஜாஜ் சிடி100 மாடலைவிட இந்த அதிக வசதிகள் நிரம்பிய மாடல் ரூ.3,300 வரை கூடுதல் விலையில் வந்துள்ளது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!!

பஜாஜ் சிடி100 பைக்கில் 99.3சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இதன் எஞ்சின் 8.1 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலிலும் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா பைக்குகளில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!!

இந்த புதிய பஜாஜ் பைக் வேரியண்ட்டுகள் பட்ஜெட் விலையில் பைக்குகளை வாங்க விரும்புவோருக்கு கூடுதல் தேர்வாக அமைந்துள்ளன.

English summary
Indian two-wheeler manufacturer Bajaj Auto has launched new variants of the CT100 and Platina in India.
Story first published: Tuesday, August 1, 2017, 15:08 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark