பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி விபரம் வெளியானது!

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி விபரம் வெளியாகி உள்ளது.

By Saravana Rajan

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிகவும் பவர்ஃபுல்லான பைக் மாடலாக பஜாஜ் டோமினார் 400 பைக் கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்த இந்த பைக் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில், இந்த பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி விபரம்!

வரும் 15ந் தேதி பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. தற்போது பஜாஜ் இணையதளத்தின் மூலமாகவும், பஜாஜ் புரோபைக்கிங் ஷோரூமிலும் இந்த பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி விபரம்!

பஜாஜ் டோமினார் 400 பைக்கை ரூ.9,000 செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்பிறகு முழுப் பணத்தையோ அல்லது கடன் திட்டத்தின் மூலமாக இந்த பைக்கை வாங்கிக் கொள்ளலாம். இருப்பினும், முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அடிப்படையில் டெலிவிரி கொடுக்கப்படும் என்பதால் முன்பதிவு செய்து வைப்பது நல்லது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி விபரம்!

டீலரிலிருந்து கிடைத்த தகவல்களின்படி, பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு 4 முதல் 6 வாரங்கள் காத்திருப்பு காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் மாடல் ரூ.1.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஏபிஎஸ் அல்லாத மாடல் ரூ.1.36 லட்சம் விலையிலும் வந்திருப்பதால், முன்பதிவு சிறப்பான எண்ணிக்கையை பெற்றிருக்கும் என தெரிகிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி விபரம்!

போட்டியாளர்களை ஒப்பிடுகையில் விலை குறைவாகவும், அதேநேரத்தில் அதிக சிறப்பம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கிறது அதாவது, முழுவதுமான எல்இடி ஹெட்லைட் சிஸ்டம், எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இந்த பைக்கின் சிறப்புகள்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி விபரம்!

முன்புறத்தில் 43மிமீ முன்புற ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு டியூவல் ஸ்பிரிங் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது. 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி விபரம்!

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் 373.3சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் இருக்கிறது. அதிகபட்சமாக 34.5 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் இந்த எஞ்சின் வழங்கும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி விபரம்!

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் க்ரூஸர் என்ற ரகத்தில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் மஹிந்திரா மோஜோ உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடுகிறது.

இந்த செய்தியின் தொடர்ச்சியாக அனைவரின் ஆவலை கிளறி உள்ள புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்!

அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles
English summary
The deliveries of the Bajaj Dominar 400 will commence from January 15th, 2017. The motorcycle can be booked online through Bajaj's official website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X