வெளிநாடுகளில் விற்பனையில் சக்கை போடு போடும் பஜாஜ் டோமினார் !

பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல புதிய வெளிநாடுகளிலும் விற்பனைக்கு செல்ல இருப்பதால், விற்பனை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Saravana Rajan

பல்சர் புகழ் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த பைக் மாடலாக டோமினார் 400 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.

வெளிநாடுகளில் ஹிட் அடித்த பஜாஜ் டோமினார் பைக்!

ரூ.1.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்த இந்த பைக்கிற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மாதத்திற்கு 10,000 பைக்குகள் என்ற விற்பனை இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்ட டோமினார், அதனை எட்ட முடியாமல் திணறி வருகிறது.

வெளிநாடுகளில் ஹிட் அடித்த பஜாஜ் டோமினார் பைக்!

ஆரம்பத்தில் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை அசைத்து பார்க்க முனைந்தாலும், இப்போது சற்றே பின் வாங்கி நிற்கிறது டோமினார். அதேநேரத்தில், இந்த பைக்கிற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வெளிநாடுகளில் ஹிட் அடித்த பஜாஜ் டோமினார் பைக்!

ஆம். கடந்த மாதம் இந்தியாவில் 2,000 டோமினார் பைக்குகள் விற்பனையாகி உள்ள நிலையில், வெளிநாடுகளில் 2,500 டோமினார் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. இது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.

வெளிநாடுகளில் ஹிட் அடித்த பஜாஜ் டோமினார் பைக்!

தற்போது தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு டோமினார் பைக் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விரைவில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய பஜாஜ் ஆட்டோ தீவிரம் காட்டி வருகிறது.

வெளிநாடுகளில் ஹிட் அடித்த பஜாஜ் டோமினார் பைக்!

ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு செல்லும்போது, விற்பனை எண்ணிக்கை கணிசமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. உள்நாட்டில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாவிட்டாலும், வெளிநாடுகளில் டோமினார் பைக்கின் விற்பனை மூலமாக இலக்கு சமன் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் ஹிட் அடித்த பஜாஜ் டோமினார் பைக்!

உள்நாட்டில் பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததற்கு, ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் ஆதிக்கம்தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதனை உடைப்பதற்கு பஜாஜ் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாடுகளில் ஹிட் அடித்த பஜாஜ் டோமினார் பைக்!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் இல்லாத பல கூடுதல் சிறப்பம்சங்களை பஜாஜ் டோமினார் 400 பைக் பெற்றிருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புறத்தில் பெரிய டிஸ்க் பிரேக், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்களாக உள்ளன. ஆனாலும், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்குத்தான் மவுசு அதிகம் உள்ளது.

வெளிநாடுகளில் ஹிட் அடித்த பஜாஜ் டோமினார் பைக்!

கேடிஎம் 390 பைக்கில் பயன்படுத்தப்படும் எஞ்சின்தான் பஜாஜ் டோமினார் 400 பைக்கிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மூன்று ஸ்பார்க் ப்ளக்குகள் கொண்ட தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட கியர் ரேஷியாவுடன் கூடிய எஞ்சினாக பஜாஜ் டோமினார் 400 பைக்கில் இடம்பெற்றிருக்கிறது.

வெளிநாடுகளில் ஹிட் அடித்த பஜாஜ் டோமினார் பைக்!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34.5 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு உள்நாட்டிலும் வரவேற்பு அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending On DriveSpark Tamil:

Most Read Articles
English summary
Bajaj aimed at selling 10,000 units of the Dominar every month; however, the going has been difficult for the bike maker with just 2,000 units of the Dominar being sold in a month. In September 2017, Bajaj sold 4,500 units of the Dominar including both domestic and export sales.
Story first published: Saturday, October 21, 2017, 12:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X