பஜாஜ்- ட்ரையம்ஃப் கூட்டணியின் புதிய பைக்கின் உருவாக்க பணிகள் துவங்கியது!

Written By:

புதிய பைக் மாடல்களை தயாரிக்கும் விதமாக, இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் பைக் தயாரிப்பு நிறுவனத்துடன் பஜாஜ் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில், இந்த புதிய கூட்டணி தயாரிக்க இருக்கும் பைக் மாடல்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ்- ட்ரையம்ஃப் கூட்டணியின் புதிய பைக்கின் உருவாக்க பணிகள் துவங்கியது!

பஜாஜ்- ட்ரையம்ஃப் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டணி குறித்து ட்ரையம்ஃப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிக் ப்ளூர் பிசினஸ் ஸ்டான்டர்டுதளத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருக்கும் தகவல்களின்படி, பஜாஜ்- ட்ரையம்ஃப் கூட்டணி 400சிசி முதல் 800சிசி வரையிலான ரகத்தில் புதிய பைக்குகளை தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பஜாஜ்- ட்ரையம்ஃப் கூட்டணியின் புதிய பைக்கின் உருவாக்க பணிகள் துவங்கியது!

மேலும், புதிய பைக் மாடல்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை இந்த கூட்டணி துவங்கிவிட்டதாகவும் அவர் கூறி இருக்கிறார். அதேநேரத்தில், பைக் மாடல்களின் விபரம், அது அறிமுகம் செய்யும் காலம் உள்ளிட்ட தகவல்களை விரைவில் வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

பஜாஜ்- ட்ரையம்ஃப் கூட்டணியின் புதிய பைக்கின் உருவாக்க பணிகள் துவங்கியது!

அவரது கருத்துப்படி, நேக்கட் வகை பைக் மாடல்களும், ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்களும் தயாரிக்க பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணி திட்டமிட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
பஜாஜ்- ட்ரையம்ஃப் கூட்டணியின் புதிய பைக்கின் உருவாக்க பணிகள் துவங்கியது!

பஜாஜ்- ட்ரையம்ஃப் கூட்டணி உருவாக்கும் புதிய பைக் மாடல்கள் இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் பல வெளிநாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று நிக் ப்ளூர் கூறி இருக்கிறார்.

பஜாஜ்- ட்ரையம்ஃப் கூட்டணியின் புதிய பைக்கின் உருவாக்க பணிகள் துவங்கியது!

தற்போது ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள ட்ரையம்ஃப் ஆலையில் அந்நிறுவனத்தின் உயர் வகை பைக் மாடல்கள் அசெம்பிள் செய்து விற்கப்படுகின்றன. இந்த நிலையில், பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் உருவாகும் பைக் மாடல்கள் புனே அருகில் சகனில் உள்ள பைக் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ்- ட்ரையம்ஃப் கூட்டணியின் புதிய பைக்கின் உருவாக்க பணிகள் துவங்கியது!

அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் புதிய பைக் மாடல்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி தயாரிக்கும் பைக் மாடல்கள் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை குறி வைத்து களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக் மாடல்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை இந்த செய்தியில் காணலாம்.
Story first published: Tuesday, August 22, 2017, 8:16 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark