ரூ.3.48 லட்சம் விலையில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகம்!

Written By:

நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் ஒருவழியாக புதிய பெனெல்லி 302ஆர் பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஷ்டிர மாநிலம், புனே நகரில் நடந்த இதற்கான விழாவிலிருந்து எமது நிருபர் புரோமித் கோஷ் அளிக்கும் தகவல்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.3.48 லட்சம் விலையில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகம்!

கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் பெனெல்லி 302ஆர் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பெனெல்லி நிறுவனத்தின் முதல் ஃபேரிங் வெர்ஷன் பைக் மாடல் என்பதால், வாடிக்கையாளர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

ரூ.3.48 லட்சம் விலையில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகம்!

இந்த நிலையில், ஒருவழியாக இந்த பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நேக்கட் ரக மாடலான பெனெல்லி டிஎன்டி 300 பைக்கின் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட மாடல்தான் இந்த புதிய பெனெல்லி 302ஆர் பைக். இதனை டொர்னேடோ 302 என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது.

Recommended Video - Watch Now!
Kawasaki Ninja Z1000 Launched InTamil - DriveSpark தமிழ்
ரூ.3.48 லட்சம் விலையில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகம்!

இந்த பைக் புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம் அமைப்புடன் வந்துள்ளது. இந்த பைக் 50:50 என்ற எடை விகிதாச்சார அடிப்படையிலான ஃப்ரேமை பெற்றிருக்கிறது. இந்த பைக் 2,175மிமீ நீளமும், 746மிமீ அகலமும், 1,146மிமீ உயரமும் கொண்டது. 180 கிலோ வெற்று எடை கொண்டது.

ரூ.3.48 லட்சம் விலையில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகம்!

இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 300சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 38.26 பிஎச்பி பவரையும், 26.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரூ.3.48 லட்சம் விலையில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் 41மிமீ அப்சைடு டவுன் ஃபோர்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரூ.3.48 லட்சம் விலையில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 260மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் ஒரு பிஸ்டன் காலிபர் கொண்ட 240மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது.

ரூ.3.48 லட்சம் விலையில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகம்!

இந்த பைக்கில் இரட்டை ஹெட்லைட் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், க்ளிப் ஆன் ஹேண்டில்பார் இருப்பதும் இதன் முக்கிய சிறப்பம்சம்.

ரூ.3.48 லட்சம் விலையில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகம்!

இந்த பைக் ஒயிட் ராஸோ, ரெட் நீரோ மற்றும் சில்வர் வெர்டே ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கிற்கு 4 ஆண்டுகள் வரை வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கான வாரண்டியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.3.48 லட்சம் விலையில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகம்!

புதிய பெனெல்லி 302ஆர் பைக் ரூ.3.48 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கவாஸாகி நின்ஜா300, கேடிஎம் ஆர்சி390 மற்றும் யமஹா ஒய்இசட்-ஆர்3 ஆகிய பைக்குகளுக்கு இந்த புதிய பெனெல்லி 302ஆர் பைக் போட்டியாக களமிறங்கி இருக்கிறது.

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli 302R launched in India. The all-new DSK Benelli 302R is priced at Rs 3.48 lakh ex-showroom (pan India).

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark