பெனெல்லி டிஎன்டி 135 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

Written By:

முதலில் துப்பாக்கி உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெனெல்லி நிறுவனம், நூற்றாண்டை கடந்து இருசக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பழமையான இத்தாலிய நிறுவனமாகும். ஏற்கனவே இந்தியாவில் பல உயர்வகை பைக் மாடல்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக விரைவில் டிஎன்டி 135 என்ற புதிய பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

பெனெல்லி டிஎன்டி 135 பைக் இந்தியா வருகிறது

பெனெல்லி நிறுவனத்தின் சிறிய வகை நேக்கட் மோட்டார் சைக்கிளான டிஎன்டி 135 முதலில் டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் நடைபெற்ற 2016ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகமானது. இவை அடுத்த மாதம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெனெல்லி டிஎன்டி 135 பைக் இந்தியா வருகிறது

பெனெல்லி டிஎன்டி135 பைக்கில் காற்றால் குளிர்விக்கப்படும், ஒற்றை சிலிண்டர் கொண்ட 135சிசி எஞ்சின் உள்ளது. இவை அதிகபட்சமாக 12.6 பிஹச்பி ஆற்றாலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

பெனெல்லி டிஎன்டி 135 பைக் இந்தியா வருகிறது

லாடிஸ் ஃபிரேம் கொண்ட டிஎன்டி135ன், முன்புறத்தில் 41மிமீ ஃபோர்க் சஸ்பென்சனும் பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் கொண்ட லேடரல் ஷாக் அப்சார்களும் உள்ளது.

பெனெல்லி டிஎன்டி 135 பைக் இந்தியா வருகிறது

அகலமான டயர்கள் பொருத்தப்பட்ட இதில் 12 இஞ்ச் அலாய் வீல்கள் உள்ளது. முன்புற டயர் 120/70 என்ற அளவும், பின்புற டயர் 130/70 அளவும் கொண்டதாகும்.

பெனெல்லி டிஎன்டி 135 பைக் இந்தியா வருகிறது

மேலும் இரண்டு பிஸ்டன் கேலிபர்கள் கொண்ட 220 மிமீ சிங்கில் டிஸ்க் பிரேக் இதன் முன்புறத்திலும், ஒரு பிஸ்டன் கேலிபர் கொண்ட 190 மிமீ சிங்கில் டிஸ்க் பிரேக் இதன் பின்புறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

பெனெல்லி டிஎன்டி 135 பைக் இந்தியா வருகிறது

7.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ள புதிய பென்னெலி டிஎன்டி135, 1,750 மிமீ நீளமும், 755 மிமீ அகலமும், 1,025 உயரமும் கொண்டதாக உள்ளது. இதன் வீல் பேஸ் 1,215 மிமீ ஆகும்.

பெனெல்லி டிஎன்டி 135 பைக் இந்தியா வருகிறது

மல்டி எல்ஈடி முகப்பு விளக்கு, 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட பென்னெலி சாலையில் செல்லும் வாகனங்களில் தனித்துவமாக தோன்றும் வகையில் உள்ளது.

பெனெல்லி டிஎன்டி 135 பைக் இந்தியா வருகிறது

டிஎன்டி135ன் இந்திய அறிமுகத்திற்கு பின்னர் கவாஸாகி அல்லது ஹோண்டா தனது பைக்குகளை இதற்கு போட்டியாக களமிறக்கலாம். டிஎன்டி135ன் விலை 1.30 லட்ச ரூபாய் முதல் 1.5 லட்ச ரூபாயாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா ஒய்இசட்எஃப் ஆர்-6 மாடல் பைக்கின் படங்கள்: 

English summary
The Benelli TNT 135 looks set to launch in India in the coming months. DriveSpark takes an in-depth look at what you can expect from the monkey bike from Benelli.
Story first published: Wednesday, February 22, 2017, 17:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark