புதிய பெனெல்லி டிஎன்டி200 பைக் வெளியீடு... கேடிஎம் ட்யூக் 200 போட்டியாளர்!

பெனெல்லி டிஎன்டி200 பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இத்தாலியில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய 200சிசி பைக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக் கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு நேரடி போட்டியாக இருக்கும். இந்த பைக் குறித்த தகவல்களை ரஷ்லேன் தளம் வெளியிட்டு இருக்கிறது.

பெனெல்லி டிஎன்டி200 பைக் வெளியீடு... நெருக்கடியில் கேடிஎம் ட்யூக் 200!

பெனெல்லி டிஎன்டி 200 என்ற பெயரில் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த புதிய பைக்கின் டிசைன் மிகச் சிறப்பாக இருக்கிறது. வழக்கமான பெனெல்லி நேக்கட் ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்கள் போன்று, சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ட்ரெஸ்ட்டில் ஃப்ரேம் இந்த பைக்கின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

பெனெல்லி டிஎன்டி200 பைக் வெளியீடு... நெருக்கடியில் கேடிஎம் ட்யூக் 200!

இந்த பைக் 164 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. 2,050மிமீ நீளமும், 810மிமீ அகலமும், 1,065மிமீ உயரமும் கொண்டுள்ளது. இந்த பைக்கில் 13 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

பெனெல்லி டிஎன்டி200 பைக் வெளியீடு... நெருக்கடியில் கேடிஎம் ட்யூக் 200!

பெனெல்லி டிஎன்டி 200 பைக்கில் முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 260மிமீ விட்டமுடைய சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பபின்புறத்தில் இரண்டு பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 240மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இல்லை.

பெனெல்லி டிஎன்டி200 பைக் வெளியீடு... நெருக்கடியில் கேடிஎம் ட்யூக் 200!

இந்த பைக்கில் 17 அங்குல கருப்பு வண்ண சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்புறத்தில் 110/80 டயரும், பின்புறத்தில் 130/70 டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்பிளிட் இருக்கைகள் இந்த பைக்கின் கூடுதல் சிறப்புகள்.

பெனெல்லி டிஎன்டி200 பைக் வெளியீடு... நெருக்கடியில் கேடிஎம் ட்யூக் 200!

புதிய பெனெல்லி டிஎன்டி 200 பைக்கில் 199.4சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 21.5 பிஎச்பி பவரையும், 18 என்எமம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

பெனெல்லி டிஎன்டி200 பைக் வெளியீடு... நெருக்கடியில் கேடிஎம் ட்யூக் 200!

எஞ்சின் திறனை பொருத்தவரையில், கேடிஎம் ட்யூக் 200 பைக் அதிகபட்சமாக 25 பிஎச்பி பவரையும், 19.2 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருப்பதால், பெனெல்லி டிஎன்டி200 பைக்கைவிட தொடர்ந்து சிறப்பான தேர்வாக இருக்கிறது. ஆனாலும், இத்தாலிய டிசைன் மற்றும் தரம் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை கவரலாம்.

பெனெல்லி டிஎன்டி200 பைக் வெளியீடு... நெருக்கடியில் கேடிஎம் ட்யூக் 200!

200சிசி முதல் 250சிசி வரையிலான நேக்கட் ரக பைக் மார்க்கெட்டில் கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக்200 பைக் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், புதிய பெனெல்லி டிஎன்டி 200 பைக் நேரடி போட்டியாக களமிறங்க உள்ளது.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Italian motorcycle manufacturer, Benelli has revealed its new naked sports bike TNT 200 at the 2017 EICMA motorcycle show in Milan, Italy.
Story first published: Thursday, November 16, 2017, 19:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X