எக்ஸ்கிளூசிவ்: இந்தியாவில் ஏபிஎஸ் உடன் கூடிய பெனெல்லி டிஎன்டி 300 மாடல் வெளியானது..!!

எக்ஸ்கிளூசிவ்: இந்தியாவில் ஏபிஎஸ் உடன் கூடிய பெனெல்லி டிஎன்டி 300 மாடல் வெளியானது..!!

By Azhagar

டிஎஸ்கே-பெனெல்லி இந்தியாவில் ஏபிஎஸ் பெற்ற டிஎன்டி 300 மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனம் ஏபிஎஸ் உடன் கூடிய 302ஆர் மாடல் பைக்கை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

டிஎஸ்கே-பெனெல்லியின் 3வது மாடல் மோட்டார் சைக்கிளாக டிஎன்டி 300 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 302ஆர் மற்றும் டிஎன்டி 600ஐ மாடலுக்கு பிறகு இது ஏபிஎஸ் உடன் கூடிய மாடலாக வெளிவந்துள்ளது.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

இந்தியளவில் இருக்கும் பெனெல்லிக்கான பல்வேறு டீலர்கள் டிஎன்டி 300 ஏபிஎஸ் பைக்கிற்கு முன்பதிவு தொடங்கி இருப்பதை பிரத்யேகமாக டிரைவஸ்பார்க் தளத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

எக்ஸ்-ஷோரூம் (இந்தியா) மதிப்பில் ரூ. 3.29 லட்சம் விலை பெறும் இந்த பைக்கிற்கு தொடக்க விலையில் ரூ.25,000 முன்பதிவாக பெறப்படுகிறது.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட சிறிது தினங்களுக்குள்ளே டிஎன்டி300 ஏபிஸ் பைக் டெலிவரி செய்யப்பட்டு விடும்.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

300சிசி லிகுவிட் கூல்டு ட்வின்-சிலிண்டர் கொண்ட இந்த பைக்கின் எஞ்சின் 37 பிஎச்பி பவர் மற்றும் 26.5 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

இதே எஞ்சின் தான் 302ஆர் மாடல் பைக்கிலும் இடம்பெற்றுள்ளது. எஞ்சினின் செயல்திறனை கூட்ட டிஎன்டி300 ஏபிஸ் பைக் 6ஸ்பீடு கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

இந்த 300சிசி நேக்கிடு மோட்டார் சைக்கிளில் அப்-சைடு ஃபிரன்ட் போக்ஸ் மற்றும் பின் சக்கரத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்-அப் உள்ளது.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

முன் சக்கரத்தில் டூயல் டிஸ்க் சிஸ்டம் கொண்டும் பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் சிஸ்டமும் பைக்கிற்கான பிரேக்கிங் அம்சங்களாக உள்ளன.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

சுமார் 196 கிலோ எடை கொண்ட இந்த பைக்கின் எரிவாயு கொள்ளவு திறன் 16 லிட்டர். பச்சை, வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு என நான்கு நிறங்களில் டிஎன்டி 300 பைக் ஏபிஎஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

டிஎஸ்கே-பெனெல்லி நிறுவனம் லியோனிசினோ ஸ்கிராம்பளர் என்ற மாடல் பைக்கை நவம்பரில் வெளியிட திட்டமிட்டு வருகிறது.

2018ல் டிஆர்கே 502 என்ற புதிய மாடலை வெளியிடவும் இந்நிறுவனம் விருப்பம் கொண்டுள்ளது.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

நேக்கிடு மோட்டார் சைக்கிளான டிஎன்டி 300 மாடலில் ஒருவழியாக பெனெல்லி ஏபிஎஸ் வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது கேடிஎம் டியூக் 390, மஹிந்திரா மோஜோ மற்றும் கவாஸாகி இசட்250 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

ஏபிஎஸ் பெற்ற புதிய பெனெல்லி டிஎன்டி 300 பைக் அறிமுகம்..!!

ஆனால் போட்டி மாடல்களில் டிஎன்டி 300 பைக்கிற்கு அடுத்தப்படியாக டியூக் 390 மட்டுமே ஏபிஎஸ் அம்சத்தை கொண்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Read in Tamil: DSK-Benelli has introduced the ABS (Anti-Lock Braking System) variant of the TNT 300 in India.
Story first published: Monday, September 18, 2017, 15:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X