பிஎம்டபிள்யூ சி400எக்ஸ் அர்பன் ஸ்கூட்டர் வெளியீடு- படங்களுடன் தகவல்கள்!

Written By:

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் மாடல் மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அட்டகாசமான பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் வெளியீடு: படங்கள், தகவல்கள்!

500சிசி திறனுக்கும் குறைவான பிரிமியம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வர்த்தக வாய்ப்பு பெருகி வருகிறது. இதனை மனதில் வைத்து நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற புதிய ஸ்கூட்டர் மாடலை பிஎஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

அட்டகாசமான பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் வெளியீடு: படங்கள், தகவல்கள்!

பிஎம்டபிள்யூ சி400எக்ஸ் என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்கூட்டர் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. அத்துடன், பிரிமியம் ஸ்கூட்டர்களில் மிகவும் அடக்கமான வடிவமைப்பையும் பெற்றிருக்கிறது. இது எளிதாக கையாள்வதற்கு உதவும்.

அட்டகாசமான பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் வெளியீடு: படங்கள், தகவல்கள்!

புதிய பிஎம்டபிள்யூ சி400எக்ஸ் ஸ்கூட்டரில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 350சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 138 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டது.

Recommended Video - Watch Now!
[Tamil] TVS Jupiter Classic Launched In India - DriveSpark
அட்டகாசமான பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் வெளியீடு: படங்கள், தகவல்கள்!

இந்த ஸ்கூட்டர் டிபியூலர் ஸ்டீல் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 35 மிமீ ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், மிக சொகுசான பயணத்தை வழங்கும் என்கிறது பிஎம்டபிள்யூ.

அட்டகாசமான பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் வெளியீடு: படங்கள், தகவல்கள்!

முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிபர்களுடன் கூடிய 265மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் பொருத்தப்பட்ட டிஸ்க் பிரேக்கும் இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உண்டு.

அட்டகாசமான பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் வெளியீடு: படங்கள், தகவல்கள்!

இந்த ஸ்கூட்டரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரத்யேக ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என்ற பாதுகாப்பு நுட்ப வசதி இருக்கறது. இது ஸ்கூட்டர் வழுக்கிச் செல்வதை தவிர்க்கும் வகையில், ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும்.

அட்டகாசமான பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் வெளியீடு: படங்கள், தகவல்கள்!

புதிய பிஎம்டபிள்யூ சி400எக்ஸ் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 6.5 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அட்டகாசமான பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் வெளியீடு: படங்கள், தகவல்கள்!

புதிய பிஎம்டபிள்யூ சி400எக்ஸ் ஸ்கூட்டர் ஸெனித் புளூ மெட்டாலிக் மற்றும் அல்பைன் ஒயிட் நான் மெட்டாலிக் என்ற இரு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அட்டகாசமான பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் வெளியீடு: படங்கள், தகவல்கள்!

இந்தியாவிலும் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற பிரிமியம் ஸ்கூட்டர்களுக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பலாம். எனவே, இதுபோன்ற மாடல்களை பிஎம்டபிள்யூ- டிவிஎஸ் கூட்டணி கொண்டு வருவதற்கு பரிசீலிக்கலாம் என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
BMW C400X revealed at EICMA 2017. The BMW C400X is a mid-capacity scooter and was developed as the demand for sub 500cc segment in scooters is on the on the rise around the globe.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark