அட்டகாசமான தோற்றத்தில், அதிர வைக்கும் தொழில்நுட்பங்கள் கூடிய பி.எம்.டபுள்யூ-வின் மின்சார ஸ்கூட்டர்..

Written By:

எதிர்கால வாகன உலகிற்காக பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்தாண்டில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது.

மின்சார பயன்பாட்டில் இயங்கும் புதிய பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்!

சூப்பர் சார்ஜிடு ஆர்5 , கான்சப்ட் 90 போன்ற பெயர்களில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் கடந்தாண்டு பைக்குகளை அறிமுகப்படுத்தியது.

மின்சார பயன்பாட்டில் இயங்கும் புதிய பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்!

இதை பின்பற்றி இந்தாண்டில் பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிடுகிறது.

இந்த அறிவிப்பின் மூலம், மின்சார ஆற்றலால் இயங்கும் எதிர்கால வாகன உலகத்தில் பி.எம்.டபுள்யூ நிறுவனமும் இணைகிறது.

மின்சார பயன்பாட்டில் இயங்கும் புதிய பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்!

இத்தாலியில் பழங்கால கார்களுக்கான கண்காட்சி ஒன்று தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

அப்போது பி.எம்.டபுள்யூ நிறுவனம் மோட்டார்ராட் கான்செப்டில் அது உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்தது.

மின்சார பயன்பாட்டில் இயங்கும் புதிய பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்!

நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் இதில் எளிதாக கையாளக்கூடிய திறன் மற்றும் அதிவேக ஏக்சல்ரேக்ஷ்ன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மின்சார பயன்பாட்டில் இயங்கும் புதிய பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்!

இதிலுள்ள ரிவெர்ஸ் கியர் எளிதாக மாற்றக்கூடிய வடிவமைப்பில் இருக்கும். இந்த ஸ்கூட்டரை பார்க்கிங் செய்யவும் பெரிய இடவசதி தேவையில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.

மின்சார பயன்பாட்டில் இயங்கும் புதிய பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்!

அடிப்படை செயல்பாடுகள், தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வாழ்க்கைக்கு ஏற்றவாறான வசதி அகியவற்றை வைத்து பி.எம்.டபுள்யூ மோட்டாராட் கான்செப்ட் ஸ்கூட்டரை வடிவமைக்கிறது.

மின்சார பயன்பாட்டில் இயங்கும் புதிய பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்!

டூயல் டோன் நிறங்களில் தோற்றம் கொண்ட இதில் சிராமிக் எல்.இ.சி விளக்குகள் முகப்பில் அமைக்கப்படுகிறது.

மின்சார பயன்பாட்டில் இயங்கும் புதிய பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்!

ஆங்கில சி எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது.

இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சம் உள்ளது.

தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் இதில் உள்ளது.

மின்சார பயன்பாட்டில் இயங்கும் புதிய பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்!

முற்றிலும் டிஜிட்டலுக்கு ஏற்றவாறான முறையில் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர் என்பதால், இதனுடைய டிஸ்பிளேவில் வண்டியின் வேகம், போகும் பாதை மற்றும் ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும்.

மின்சார பயன்பாட்டில் இயங்கும் புதிய பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்!

அட்டகாசமான தோற்றம் மற்றும் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள பி.எம்.டபுள்யூ மோட்டார்ரெட் கான்செப்ட் ஸ்கூட்டரின் விற்பனை குறித்த விவரங்களை பி.எம்.டபுள்யூ நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
BMM unveils Zero Emission Scooter at Itay motor exhibitiob. The BMW Scooter will reinvent two-wheeled urban mobility. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark