இந்தியாவில் காப்புரிமை பெற்ற பிஎம்டபுள்யூ 310 ஜி.எஸ் பைக்; ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனுக்கு போட்டியா?

இந்தியாவில் காப்புரிமை பெற்ற பிஎம்டபுள்யூ 310 ஜி.எஸ் பைக்; ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனுக்கு போட்டியா..??

By Azhagar

பிஎம்டபுள்யூ மோட்டாராட் இந்தியாவில் ஜி 130 ஆர் பைக்கை வெற்றிக்கரமாக தயாரித்து முடித்தது. ஆனால் ஜெர்மனில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமைக் கிளை இந்த பைக்கை இந்தியாவில் வெளியிடுவதில் முட்டுக்கட்டை போட்டது.

பிஎம்டபுள்யூ விரைவில் வெளியிடும் ஜி 310 ஜி.எஸ் பைக்..!!

ஜி 310 ஆர் பைக்கை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ஜி 310 ஜிஎஸ் அட்வெஞ்சர் மாடல் மோட்டார் சைக்கிளை, மிலானில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் பிஎம்டபுள்யூ மோட்டார்ராட் அறிமுகப்படுத்தியது.

பிஎம்டபுள்யூ விரைவில் வெளியிடும் ஜி 310 ஜி.எஸ் பைக்..!!

உலகளவில் அதிகமானோர் விரும்பும் மாடலாக மாறிப்போன ஜி 310 ஜிஎஸ் பைக்கிற்கு, பிஎம்டபுள்யூ இந்தியாவில் காப்புரிமை பெற்றுள்ளதாக பிரபல ’காடிவாடி’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிஎம்டபுள்யூ விரைவில் வெளியிடும் ஜி 310 ஜி.எஸ் பைக்..!!

இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 2018ம் ஆண்டு மத்தியில் இந்தியாவில் பிஎம்டபுள்யூ புதிய ஜி 310 எஸ் பைக்கை வெளியிடும் முடிவில் உள்ளது.

பிஎம்டபுள்யூ விரைவில் வெளியிடும் ஜி 310 ஜி.எஸ் பைக்..!!

ஜி 310 ஆர் பைக்கிற்கான தயாரிப்பில் பிஎம்டபுள்யூ, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. அதனால் இதற்கான தயாரிப்புகள் பணிகள் அனைத்தும் டிவிஎஸ்-ன் ஓசூர் தொழிற்சாலையில் நடைபெற்றது.

பிஎம்டபுள்யூ விரைவில் வெளியிடும் ஜி 310 ஜி.எஸ் பைக்..!!

இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தாலும், இது தற்போது சர்வதேச மார்கெட்டிற்காக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

பிஎம்டபுள்யூ விரைவில் வெளியிடும் ஜி 310 ஜி.எஸ் பைக்..!!

அப் ஃபிரெண்டு கொண்ட யுஎஸ்டி ஃபோர்க்ஸ் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கில் உள்ளது.

தொலைதூர பயணங்களுக்கு என்று குறிவைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் இதனுடைய பின்பக்க ஹேண்டில்பாரில் லக்கேஜூகளை வைத்துக்கொள்ளும் வசதி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபுள்யூ விரைவில் வெளியிடும் ஜி 310 ஜி.எஸ் பைக்..!!

தொலைதூர பயணிகளை குறிக்கோளாக கொண்டு தயாராகி உள்ள இந்த பைக் ஜி 310 ஆர் மாடலை விட வலிமை வாய்ந்ததாக உள்ளது. மேலும் இதற்கான சஸ்பென்ஷனும் அதிக ஆயுட்காலம் கொண்டதாக உள்ளது.

பிஎம்டபுள்யூ விரைவில் வெளியிடும் ஜி 310 ஜி.எஸ் பைக்..!!

இந்தியாவில் பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரியளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன.

அதேசமயத்தில் சுற்றுலா தேவைகளுக்காக தயாராகி வரும் வாகனங்களும் நல்ல விற்பனை திறனை பெற்றுள்ளன.

பிஎம்டபுள்யூ விரைவில் வெளியிடும் ஜி 310 ஜி.எஸ் பைக்..!!

சுற்றுலா செல்ல திறன் பெற்ற பைக்குகளுக்கு அதிகரித்து வரும் வரவேற்பால் பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் அனைவருக்கும் ஏற்ற விலையில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபுள்யூ விரைவில் வெளியிடும் ஜி 310 ஜி.எஸ் பைக்..!!

ஜி 310 ஜிஎஸ் பைக், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், மஹிந்திரா மோஜோ, விரைவில் வெளிவரவுள்ள கவாஸாகி எக்ஸ்-300 மற்றும் கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்குகளுக்கு போட்டியாக இந்திய சந்தையில் வெளிவருகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: BMW Motorrad G 310 GS adventure tourer motorcycle has patented in India. Click for the Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X