கேடிஎம் டியூக் 390 பைக்கை ஓரங்கட்ட விரைவில் களமிறங்கும் பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்...!!

கேடிஎம் டியூக் 390 பைக்கை ஓரங்கட்ட விரைவில் களமிறங்கும் பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்...!!

By Azhagar

உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் ஜெர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யு, பிஎம்டபுள்யூ மோடோராட் என்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் மூலம் பி.எம்.டபிள்யு ஜி310 ஆர் என்ற பைக் மாடலை உருவாக்கியுள்ளது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

நேக்கடு ஸ்டீரிட் ரக ஜி310 ஆர் பைக்கை, பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம், தமிழகத்தின் டிவிஎஸ் நிறுவனத்துடன் சேர்ந்த உருவாக்கி வந்தது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

இந்தியாவில் பல மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த பைக் சர்வீஸ் மற்றும் விற்பனை துறையில் நிலவி வந்த சில தடங்கல்கள் காரணமாக ஜி310 ஆர் பைக்கின் இந்திய வருகை தாமதமாகிக்கொண்டே வந்தது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

தற்போது இதற்கான பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டு, இந்திய பணமதிப்பில் மிகவும் மலிவான விலையில் இந்த பைக் விற்பனைக்கு வருவது பிஎம்டபுள்யூ தயாரிப்புகளின் விற்பனை பிரிவு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

கடந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக பி.எம்.டபிள்யு ஜி 310 இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இவ்வகை பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது.

Recommended Video

[Tamil] Kawasaki Ninja Z1000 Launched - DriveSpark
பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

தற்போது இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்போர்ட்டிவ் பைக்குகளை வழங்கி வரும் கேடிஎம், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இணையான தரத்துடன் உள்நாட்டிலேயே ஜி310 ஆர் பைக்கைபி.எம்.டபிள்யு உற்பத்தி செய்தது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

ஜி 310 மாடலோடு இதற்கு இணையான மற்றொரு மாடலையும் பி.எம்.டபிள்யு அறிமுகப்படுத்துகிறது. இதன் அட்வான்ச்சர் வெர்ஷனான ஜி 310 ஜிஎஸ் பைக்கும் ஒருசேர 2018ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

ஜி 310 முழுக்க 313சிசி எஞ்சினை பெற்றுள்ளது. அதன்மூலம் 33.5 பிஎச்பி பவர், 28 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

செயல்திறனுக்கு ஏற்றவாறு 6 ஸ்பீடு கியர் பாக்ஸை கொண்டிருப்பதால் அடுத்தடுத்து 6 லெவலில் ஸ்பீடுகளும் அள்ளும்.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

ஏற்கனவே பி.எம்.டபிள்யுவோடு இணைந்து டி.வி.எஸ் அப்பாச்சி பைக், 6 ஸ்பீடு கியர் பாக்ஸோடு தயாரிக்கப்பட்டதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

பிஎம்டபுள்யூ ஜி310 ஆர் பைக்கில் முன்புறம் ஃபோர்க்ஸ் மற்றும் பின் சக்கரத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் வசதி செய்யப்பட்டிருப்பதால் இந்த பைக் சீரான பயணத்தை வழங்கும்.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

டிஸ்க் பிரேக் வசதி பாதுகாப்பான திடீர் நிறுத்தத்தை உறுதிப்படுத்துகிறது. மொத்தத்தில் உச்சநிலையில் இருக்கும் அனைத்து உயர் தொழில்நுட்ப அம்சங்களோடு பிஎம்டபுள்யூ இந்த பைக்கை தயாரித்துள்ளது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வருகை உறுதியானது..!!

பிஎம்டபுள்யூ மோட்டோராட் தயாரித்திருக்கும் ஜி310 ஆர் நேக்கிடு ஸ்ட்ரீட் மாடல் பைக், இந்தியாவில் வலம் வரும் பல ரேஸ் தர பைக்குகளுக்கு சரிநிகர் போட்டியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Most Read Articles
English summary
BMW Motorrad’s KTM Duke 390 Rival Is Finally Coming To India. Click for Details...
Story first published: Saturday, December 9, 2017, 17:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X