சிரோன் காருடன் அல்ட்ரா மார்டன் சைக்கிளை வழங்கும் புகாட்டி

Written By:

புகாட்டி நிறுவனத்தின் சிரோன் சூப்பர் காரை எதிர்நோக்கி உலகமே காத்திருக்கிறது. இந்நிலையில் சிரோன் காரின் துணைப் பொருட்களுக்கான பட்டியலில், புதியதாக ஒரு சைக்கிளையும் தயாரித்து புகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிரோன் காருடன் அல்ட்ரா மார்டன் சைக்கிளை வழங்கும் புகாட்டி

சிரோன் காரின் துணைப் பொருளான (accessories) இந்த சைக்கிள், அல்ட்ரா மார்டன் வடிவில் தற்போதைய சூழ்நிலைக்கும் ஏற்றவாற்றான தோற்றத்தில் புகாட்டி இதை உருவாக்கியுள்ளது.

சிரோன் காருடன் அல்ட்ரா மார்டன் சைக்கிளை வழங்கும் புகாட்டி

புகாட்டி நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும், ஜெர்மன் நாட்டை சேர்ந்த பி.ஜி என்பவர் தான் சைக்கிளை வடிவமைத்துள்ளார். அதனால் சைக்கிளிற்கான பெயரில் புகாட்டி என்பதுடன் பி.ஜி-யை இணைத்துக்கொண்டு, சைக்கிளிற்கு பி.ஜி. புகாட்டி என பெயரிடப்பட்டுள்ளது

சிரோன் காருடன் அல்ட்ரா மார்டன் சைக்கிளை வழங்கும் புகாட்டி

தட்டையான - பட்டை வடிவம் கொண்டுள்ள இந்த ஹைபிரிட் மாடல் சைக்கிள் 5 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், உலகிலேயே மிகவும் இலகுவான எடை கொண்ட சைக்கிளாகவும் பி.ஜி. புகாட்டி அடையாளம் பெற்றுள்ளது.

சிரோன் காருடன் அல்ட்ரா மார்டன் சைக்கிளை வழங்கும் புகாட்டி

பார்க்க ஒரு மேம்படுத்தப்பட்ட மாடலாக தெரிந்தாலும், மற்ற சைக்கிள்களில் அமைந்துள்ள அதே செயல் திறன் தான் இதிலும் உள்ளது. ஒரே அளவான வேகம், சங்கிலிகளால் இணைக்கப்பட்ட சக்கரங்கள், ஹேண்டில் பாருக்கு எதிரில் இருக்கை என அனைத்தும் அதே வடிவமைப்புகள் தான், புதிய மாற்றம் ஏதுமில்லை.

சிரோன் காருடன் அல்ட்ரா மார்டன் சைக்கிளை வழங்கும் புகாட்டி

சைக்கிள் புகாட்டி உடையதாக இருந்தாலும், ஜெர்மன் நாட்டின் பல முன்னணி நிறுவனங்கள் பல இதற்கான பாகங்களை தயாரித்துள்ளன. சைக்கிள் தயாரிப்புக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் இலகுவான எடையிலேயே தயாராகியுள்ளன.

சிரோன் காருடன் அல்ட்ரா மார்டன் சைக்கிளை வழங்கும் புகாட்டி

புகாட்டி தயாரிக்கும் காரை வாங்க முடியாவிட்டாலும் கூட, இந்த புதிய சைக்கிளையாவது வாங்கிவிடலாம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம். ஆனால் புகாட்டி தனது தயாரிப்புகள் ஏதையும் மற்றவர்கள் சாதரணமாக எடுத்துதுக்கொள்ளக் கூடாது என்று நினைக்கும் நிறுவனம்.

சிரோன் காருடன் அல்ட்ரா மார்டன் சைக்கிளை வழங்கும் புகாட்டி

அதனால் இந்த சைக்கிள்களை குறிப்பிட்ட அளவில் அதாவது 667 என்ணிக்கையில் மட்டுமே புகாட்டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவரை சைக்கிளின் விலை, திறன் குறித்து எந்த தகவல்களையும் புகாட்டி வெளியிடவில்லை. இருப்பினும், கார் தயாரிப்பில் மட்டுமல்லாமல், பைக் தயாரிப்பிலும் முன்னணி நிறுவனமாக உள்ள புகாட்டி, சைக்கிளில் மட்டும் புதுமையை கொண்டுவரமலா இருந்துவிடும்.

சிரோன் காருடன் அல்ட்ரா மார்டன் சைக்கிளை வழங்கும் புகாட்டி

சிரோன் கார் எந்தெந்த நிறங்களில் எல்லாம் விற்பனைக்கு வெளிவருகிறதோ, அதே நிறங்களிலும் பி.ஜி. புகாட்டி சைக்கிள்கள் வெளிவரும்.

மேலும்... #bugatti #புகாட்டி
English summary
Bugatti has launched a bicycle to match with chiron hypercar. A worth of 2.5 million euro chiron hyper car, has bicycle as its accessory

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark