பி.எஸ்.3 எஞ்சினுக்கு அனுமதி வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பி.எஸ். 3 எஞ்சின் கொண்ட வாகனங்களை விற்காமல் வைத்திருக்கும் டீலர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. அதுகுறித்த தகவல்கள் இனி...

By Azhagar

பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட இரு சக்கர வாகனங்களை டெல்லி நகரத்தின் வட்டார போக்குவரத்து அலுவகங்களில் பதிவு செய்ய டெல்லி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

சுற்றுப்புறச் சூழலை பாதிப்படைய செய்யும் பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்கள் எதுவும் இந்தியாவில் பதிவு செய்யப்படமாட்டாது எனக்கூறி உச்சைநீதிமன்றம் தடை பிறப்பித்து உத்தரவு வழங்கியது.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

இந்த உத்தரவால் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதிலும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவகங்களிலும் பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்களை பதிவு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உத்தரவால் பல வாகன டீலர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிப்பு அடைந்ததாக பல செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

மேலும் சில தகவல்கள் ஷோரூம் மற்றும் டீலர்களிடம் இருந்த பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்கள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தன.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

இந்த சூழ்நிலையில் டெல்லி அரசு, மார்ச் 31ம் தேதி வரை வாங்கப்பட்ட பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட இரு சக்கர வாகனங்களை அந்நகரத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளது.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

இதை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடை உத்தரவால் பெரும் பாதிப்பை சந்தித்த டெல்லி வாகன டீலர்கள், தற்போது டெல்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

கடந்த மார்ச மாத இறுதியில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடை ஆணையை உறுதி செய்ததால்,

இதுவரை தலைநகர டெல்லியில் மார்ச் மாதம் 31ம் தேதி வரை வாங்கப்பட்ட ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

மார்ச் 31ம் தேதி வரை வாங்கப்பட்ட வாகனங்களுக்கான ஆவணங்களை ஆராய்ந்த பிறகே, டெல்லி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருசக்கர வாகனங்களை பதிவு செய்யப்படவேண்டும் என்று அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

பதிவு செய்யப்படவுள்ள வாகனங்களுக்கு ஆன்லைன் கட்டணங்கள், காப்பீட்டு கொள்கைகள் போன்றவற்றில் நிலுவை இருந்தால், அதற்கு உரிமம் வழங்கும் அலுவலகங்கள் தான் பொறுப்பு எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

உரிமம் பெறுவதற்காக காலக்கெடுவை மே 15ம் தேதி வரை உயர் நீதிமன்றம் நீட்டியுள்ளது.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு சேவை வரிக்காக ஆன்லைனில் விண்ணபிக்க தவறிய சுய பதிவு அல்லாத வாகன டீலர்களுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு டெல்லி மாநிலத்தில் உள்ள பெரும்பாலான வாகன டீலர்கள் தொடர்ந்து டெல்லி உயர்நீதி மன்றத்தை அனுகத்தொடங்கினர்.

பி.எஸ்.3 எஞ்சினுக்கு டெல்லியில் திடீர் அனுமதி

அவர்களது முயற்சியின் காரணமாக மார்ச் 31ம் தேதி வரை விற்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கான உத்தரவை டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.

Most Read Articles
English summary
The Government of Delhi has directed the Transport department to register BS-III two-wheelers which were sold on or before March 31, 2017.
Story first published: Saturday, May 13, 2017, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X