டிஎஸ்கே ஹயோசங் அக்யுய்லா 250 லிமிடட் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

மகராஷ்டிராவைச் சேர்ந்த டிஎஸ்கே நிறுவனமும், கொரியாவைச் சேர்ந்த ஹயோசங் நிறுவனமும் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் தொழிலில் கூட்டு சேர்ந்து 'டிஎஸ்கே ஹயோசங்' என்ற பிராண்டின் கீழ்

ப்ரீமியம் பைக்குகளை இந்தியாவில் சந்தைப்படுத்தி வருகிறது.

ஹயோசங் அக்யுய்லா 250 லிமிடட் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஜிடி250ஆர், ஜிடி650ஆர், ஜிடி650என், அக்யுய்லா ப்ரோ, அக்யுய்லா250, எஸ்டி7 ஆகிய ப்ரீமியம் மற்றும் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வரும் இந்நிறுவனம் தற்போது ‘அக்யுய்லா250' பைக்குகளின் லிமிடட் எடிசனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹயோசங் அக்யுய்லா 250 லிமிடட் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

‘அக்யுய்லா250' லிமிடட் எடிசனில் 100 பைக்குகளை மட்டுமே அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவை மேட் பிளாக், பச்சை மற்றும் டெசர்ட் ப்ரவுன் ஆகிய 3 பிரத்யேக வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹயோசங் அக்யுய்லா 250 லிமிடட் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஒவ்வொரு வண்ணத்திலும் 100 பைக்குகள் என இல்லாமல் மொத்தமே 100

பைக்குகளை மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்பதனால் இதனை வாங்க கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹயோசங் அக்யுய்லா 250 லிமிடட் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

தொழில்நுட்ப ரீதியில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தற்போது கிடைத்து வரும் ஹயோசங் ‘அக்யுய்லா250' பைக்கில் உள்ள 249சிசி டிஓஹச்சி வி-ட்வின் இஞ்சின் தான், புதிய லிமிடட் எடிசன் பைக்கிலும் உள்ளது. இந்த இஞ்சின் 9,500ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 26.2 பிஹச்பி ஆற்றலையும், 7,000ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 21.37 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

ஹயோசங் அக்யுய்லா 250 லிமிடட் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இதன் டேங்க் கொள்ளளவு 14 லிட்டர் ஆகும். முன்புறத்தில் டிஸ்க் பிரேக், டெலஸ்கோபிக் சஸ்பென்சனும், பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர்களும் கொண்டதாகும். இதன் மொத்த எடை 179 கிலோவாகும்.

ஹயோசங் அக்யுய்லா 250 லிமிடட் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்த லிமிடட் எடிசன் பைக் ₹ 2,94,000 (டெல்லி எக்ஸ் ஷோரூம் என்ற விலையில் கிடைக்கும். ஹயோசங் நிறுவனம் அதன் சூப்பர் பைக்குகளை வட்டியில்லா தவனைத் திட்டத்திலும் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹயோசங் அக்யுய்லா 250 லிமிடட் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

தற்போது கிடைத்து வரும் லிமிடட் எடிசன் அல்லாத அக்யுய்லா250 பைக்குகள் ₹ 2,84,000 (டெல்லி எக்ஸ் ஷோரூம் என்ற விலையில் கிடைத்து வருகிறது. இந்த லிமிடட் எடிசன் மாடல் பைக்குகள் டிஎஸ்கே

ஹயோசங் நிறுவனத்தின் அனைத்து டீலர்களிடமும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹயோசங் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 32 டீலர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹயோசங் அக்யுய்லா 250 லிமிடட் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இது குறித்து டிஎஸ்கே மோடோவீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சிரிஷ் குல்கர்னி, கருத்து தெரிவித்த போது, "500சிசிக்கும் குறைவான பைக் செக்மெண்டில் ஹயோசங் அக்யுய்லா250 பைக்குகள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதனை கொண்டாடும் விதமாக இந்த லிமிடட் எடிசன் பைக்குகள் வெளியிடப்பட்டுள்ளன," என்றார்.

பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்: 

English summary
Limited run Hyosung Aquila cruiser is available in three different colours.
Story first published: Wednesday, March 1, 2017, 10:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark