டுகாட்டி 1299 பேனிகல் ஆர் ஃபைனல் பைக் இந்தியாவில் ரூ. 59.18 லட்சம் விலையில் அறிமுகம்..!!

Written By:

டுகாட்டி நிறுவனம் தயாரித்துள்ள 1299 பேனிகல் ஆர் ஃபைனல் என்ற பைக் இந்தியாவில் ரூ. 59.18 லட்சம் விலையில் அறிமுகமாகியுள்ளது.

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

இதுவரை டுகாட்டியின் தயாரிப்புகளில் அதிக எக்ஸ்ட்ரீம் திறன் பெற்ற முதல் பைக் என்ற பெருமையையும் 1299 பேனிகல் ஆர் ஃபைனல் மாடல் பெற்றுள்ளது.

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

பேனிகல் சிரீஸின் வடிவமைப்பு டுகாட்டிக்கான தனித்துவமாகும். அதை தக்கவைத்துக்கொள்ள அந்நிறுவனம் புதிய பேனிகல் மாடலை டிசைன் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

அத்லெட்டிக் கட்டமைப்பை பெற்ற

1299 பேனிகல் ஆர் ஃபைனல் பைக்கில் 1285சிசி திறன் பெற்ற சூப்பர்குவாத்ரோ எல்-ட்வின் எஞ்சின் உள்ளது.

இது 206. 5 பிஎச்பி பவர் மற்றும் 142 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். மேலும் இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

1299 சூப்பர்லெகராவில் வழங்கப்பட்டதை போன்றே கிரான்க்ஷிஃப்ட், பெரிய கிரான்க் பின் மற்றும் டங்ஸ்டன் பேலென்சிங் பேட்கள் வழங்கப்பட்டுள்ளது.இதனால் வழக்கமான டுகாட்டி தயாரிக்கும் பைக்குகள் போலில்லாமல், குறைந்த அளவிலான எடையில் தான் 1299 பேனிகல் ஆர் ஃபைனல் பைக் இருக்கும்.

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

டுகாட்டி கோரஸ் வடிவைத்திருந்த ஃபிரேம்கள் இந்த புதிய மாடல் பேனிகல் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இதனுடைய மொத்த எடையுமே 190 கிலோ மட்டுமே.

இருந்தாலும் டுகாட்டி முன்னர் வெளியிட்ட 1299 சூப்பர்லெகரா மாடலை விட, இந்த புதிய பைக்கின் எடை 23 கிலோ கூடுதலாகும்.

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

பைக்கிறான சஸ்பென்ஷனை சிறந்தளவில் வழங்க, 43மிமீ அளவில் நிக்ஸ் 30 யுஎஸ்டி ஃபோர்க்ஸ் உள்ளது. டிடிஎக்ஸ்36 மோனோ-ஷாக் அப்ஸாபர் பின் சக்கரங்களுக்கான பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

டுகாட்டி 1299 பேனிகல் ஆர் ஃபைனல் பைக் முற்றிலும் டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்ட அக்ரோபோவிக் எக்சாஸ்ட் கொண்டது. இதனுடைய அசைவற்ற அளவீட்டுடன் ஏபிஸ் பிரேக் அமைப்பு, உராய்வு கட்டுபாட்டு கருவி மற்றும் எஞ்சின் பிரேக் கட்டுபாடு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

இதனுடைய சிறப்பே இதிலுள்ள மூன்று டிரைவிங் மோடுகள் தான். காலம், சூழ்நிலை மற்றும் தேவை ஆகியவற்றை கருதி பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள ரேஸ், ஸ்போர்ட் மற்றும் வெட் என்ற மூன்று டிரைவிங் மோடுகளை பயன்படுத்தலாம்.

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

டுகாட்டியின் உச்சபட்ச விற்பனை திறனை வழங்கிய மாடல்களில் பேனிகல் சிரீஸும் ஒன்று. அது தற்போது விரைவில் வெளிவரவுள்ள இந்த புதிய 1299 பேனிகல் ஃபைனல் மாடலுடன் நிறைவுபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

அதை மனதில் வைத்துதான் இந்த பைக்கை தயாரிக்கும் போதே பேனிகல் சிரீஸை இறுதி செய்யும் விதமாக, ஃபனைல் என்ற பெயரை பைக்குடன் டுகாட்டி இணைத்துவிட்டது.

இறுதி வடிவம் பெறும் டுகாட்டி பேனிகல் பைக் சிரீஸ்..!!

இந்தியா உட்பட பல நாடுகலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டுகாட்டி 1299 பேனிகல் ஆர் ஃபைனல் பைக்கின் விற்பனை செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Read in Tamil: Ducati 1299 Panigale R Final Edition Launched In India At Rs 59.18 Lakh. Click for Details...
Story first published: Friday, July 14, 2017, 11:56 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos