டுகாட்டி டயாவெல் டீசல் பைக்கின் டெலிவிரி இந்தியாவில் துவங்கியது!

Written By:

டுகாட்டி டயாவெல் டீசல் சூப்பர் பைக்கின் டெலிவிரி பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக்கின் டெலிவிரி இந்தியாவில் துவங்கியது!

டீசல் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்பெஷல் எடிசன் டயாவெல் சூப்பர் பைக் மாடலை டுகாட்டி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. உலக அளவில் மொத்தமாகவே 666 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக்கின் டெலிவிரி இந்தியாவில் துவங்கியது!

இந்த பைக்கில் ஏராளமான கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் இடம்பெற்று இருக்கின்றன. டீசல் நிறுவனத்தின் பாரம்பரியத்தையும், தொழில்நுட்ப திறனையும் காட்டும் விதத்தில், இந்த பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக்கின் டெலிவிரி இந்தியாவில் துவங்கியது!

இந்த பைக்கின் வெல்டிங் மற்றும் ரிவிட்டுகள் போன்றவை வெளியில் தெரியும் விதத்தில், கொடுக்கப்பட்டு இருப்பது வித்தியாசத்தையும், தனித்துவத்தையும் கொடுக்கிறது.அதேபோன்று, முத்திரைகள், விசேஷமான வண்ணம், மிரட்டலான பைக்கின் தோற்றம் ஆகியவை இணைந்து கவர்கிறது.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக்கின் டெலிவிரி இந்தியாவில் துவங்கியது!

எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. சைலென்ஸரில் விசேஷமான செராமிக் பூச்சும் மற்றும் கருப்பு வண்ண பூச்சும் தனித்துவமான அழகை தருகிறது.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
டுகாட்டி டயாவெல் டீசல் பைக்கின் டெலிவிரி இந்தியாவில் துவங்கியது!

இந்த சூப்பர் பைக்கில் டுகாட்டி டெஸ்ட்ரேட்டா 11-டிகிரி 1198சிசி எல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 152 பிஎச்பி பவரையும், 123 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக்கின் டெலிவிரி இந்தியாவில் துவங்கியது!

டுகாட்டி டயாவெல் டீசல் பைக்கில் டுகாட்டி டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன. சாலை நிலைகளுக்கு தக்கவாறு எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் மல்டி டிரைவ் மோடுகள் உள்ளன.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக்கின் டெலிவிரி இந்தியாவில் துவங்கியது!

புதிய டுகாட்டி டயாவெல் டீசல் சூப்பர் பைக் ரூ.21.72 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். மும்பை, டெல்லி என்சிஆர், பெங்களூர், ஆமதாபாத், கொச்சி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள டுகாட்டி ஷோரூம்களில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Diavel Diesel Deliveries Commence In India.
Story first published: Wednesday, October 11, 2017, 18:01 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark