டுகாட்டியின் புதிய மிருகம்: மான்ஸ்டர் 797 இந்தியாவில் ரூ. 7.77 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

உலகளவில் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான புகாட்டி தனது புதிய மான்ஸ்டர் 797 மாடலை இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

கடந்த 2016ல் இத்தாலியில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் அறிமுகமான இந்த பைக், டுகாட்டியின் மான்ஸ்டர் வகையில் மிகவும் சிறிய மாடலாக உள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஏர்-கூல்டு 803சிசி திறனில் எல்-ட்வின் எஞ்சின் புதிய டுகாட்டி மான்ஸ்டர் 797 மாடலில் உள்ளது. இது 74 பி.எச்.பி பவர் மற்றும் 68.6 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த பைக்கில் உருவாகும் இத்தகைய பவர் மற்றும் டார்க் திறனை பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் பின் சக்கரங்களுக்கு கடத்தும்.

டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

மான்ஸ்டர் 797 பைக்கில் ஒரே பகுதியை கொண்ட டூபூலர் ஸ்டீலினால் ஆன ஃபிரேம் உள்ளது. அதனுடன் இரட்டை ஸ்பார் ஸ்விங் களம் உள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

பைக்கின் முன்பக்கத்தில் சஸ்பென்ஷனின் சிறப்பான செயல்பாட்டிற்காக 43எம்.எம் காயபா யுஎஸ்டி ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது.

பைக்கின் பின்பக்கத்தில் அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்ள சாஸ் மோனா ஷாக் அப்ஸபர் உள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

4 பிஸ்டன் கொண்ட மோனோபிளாக் கேலிபர் ட்வின் 320 எம்.எம் அளவில் முன் சக்கரங்களுக்கான பிரேக் அமைப்புகள் உள்ளன. அதேபோல பிரம்போ டிஸ்க் கொண்ட 245 எம்.எம் அளவுக்கொண்ட பின்பக்க பிரேக் அமைப்புகள் உள்ளன.

டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு தானியங்கி பிரேக் அமைப்பு டுகாட்டி மான்ஸ்டர் 797 பைக்கில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

குறுக்கும் நெடுக்குமான டிசைனில் தயாரான ரோஸா 2 டயர்கள், இந்த வண்டியின் 17 அங்குல அலாய் சக்கரங்களில் முன் பின் என இருவேறு பக்கங்களில் உள்ளன.

மான்ஸ்டர் 821 மாடலில் இருக்கக்கூடிய எல்.சி.டி பேனல் லைட்டை தான் புதிய மான்ஸ்டர் 797 பைக்கும் பெற்றுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த பைக்கில் உள்ள மொத்த விளக்குகளும் எல்.இ.டி தொழில்நுட்பத்தால் இயங்குபவை . மேலும் இதற்கான விளக்குகளில் மட்டும் சிவப்பு, ஸ்டார் வையிட் சில்க் மற்றும் ஸ்டெல்த் பிளேக் என நான்கு நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன.

டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

பார்க்கவே மிரட்டும் வடிவத்தில் உள்ள டுகாட்டி மான்ஸ்டர் 797 மோட்டார் சைக்கிள், விற்பனையில் டிரையம்பின் ஸ்ட்ரீட் ட்ரிபிள் மற்றும் ஏப்பரில்லா ஷிவர் 900 ஆகிய பைக்குகளுடன் போட்டியிட உள்ளது.

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Monster 797 launched In India. The all-new Ducati Monster 797 is priced at Rs 7.77 lakh ex-showroom. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark