ராயல் என்ஃபீல்டு Vs பஜாஜ்: டுகாட்டியை கைப்பற்ற போகும் அந்த நிறுவனம் யார்..??

ராயல் என்ஃபீல்டு Vs பஜாஜ்: டுகாட்டியை கைப்பற்ற போகும் அந்த நிறுவனம் யார்..??

By Azhagar

உலகளவில் இருசக்கர வாகன விற்பனையில் கொடிகட்டி பறக்கும் டுகாட்டி நிறுவனத்தை ராயல் என்ஃபீல்டு கைபற்ற தீவிரமாக முயற்சித்து வருகிறது.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் துணை நிறுவனமான டுகாட்டியை, விற்பனை செய்யும் முடிவை வோக்ஸ்வேகன் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

டுகாட்டிக்கான நிர்வாகத்தை சரியாக கட்டமைக்க முடியாத காரணத்தினால் அதை வோக்ஸ்வேகன் விற்பனை செய்வதாக தகவல் வெளியானது.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

ஆனால் இது தான் காரணம் என்பதை டுகாட்டி அல்லது வோக்ஸ்வேகன் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

வோக்ஸ்வேகன் மற்றொரு துணை நிறுவனமான ஆடி தான் டுகாட்டிக்கான நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

டுகாட்டியை விற்கவுள்ளதாக வோக்ஸ்வேகன் அறிவித்த உடன் கனரக வாகன உற்பத்தி நிறுவனமான ஐஷர் (EICHER) அதை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

ஐஷர் நிறுவனத்தின் கீழ் தான் பிரபல ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

டுகாட்டி போன்று அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளை தயாரிக்கும் நிறுவனத்தை ஐஷர் வாங்கினால், ஐஷருக்கு இருசக்கர வாகன விற்பனை துறையில் இன்னும் பன்மடங்கு சாதகமே.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

இதை கருதியே வோக்ஸ்வேகனின் டுகாட்டி நிறுவனத்தை கைப்பற்ற துடித்து வருகிறது ராயல் என்ஃபீல்டு பைக்குகளை தயாரிக்கும் ஐஷர்.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

ஐஷர் நிறுவனம் மட்டுமில்லாமல், டுகாட்டியை கைப்பற்ற பஜாஜ், ஹீரோ இந்திய நிறுவனங்களும் அதற்கான போட்டியில் சம பங்கை வகிக்கின்றன.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

இந்திய நிறுவனங்களுடன் சர்வதேச நிறுவனங்களாக ஹோண்டா மற்றும் ஹார்லி டேவிட்சனும் இந்த போட்டி பட்டியலில் உள்ளன.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

டுகாட்டியை கைப்பற்ற உலக நிறுவனங்கள் பல ஈடுபடும் போட்டியில் ராயல் என்ஃபில்டு வென்றுவிட்டதாகவே கருதப்படுகிறது.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

அதற்காக அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 1.8 பில்லியன் முதல் 2.0 பில்லியன் வரை டுகாட்டியை வாங்குவதற்கான மதிப்பை ஐஷர் தயார் நிலையில் வைத்துள்ளது.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

மேலும் டுகாட்டியை வாங்குவதற்கான போட்டியில் ஐஷருடன் தீவிர போட்டியை அளித்த பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் டிரையம்ப் உடன் கூட்டணி அமைத்தது.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

கூட்டணி உறுதியான நிலையில், டுகாட்டியை வாங்குவதில் பஜாஜ் அதிக ஆர்வம் காட்டாது என்று இந்திய ஆட்டோமொபைல் துறையில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் டுகாட்டியை கைப்பற்ற போகும் அந்த நிறுவனம் என்ன என்பது குறித்த தகவலை வோக்ஸ்வேகன் முறைப்படி அறிவிக்கவுள்ளது.

டுகாட்டியை கைப்பற்ற போராடும் ராயல் என்ஃபீல்டு..!!

அதற்கான அனைத்து முறைகளும் முடிவடைந்து, டுகாட்டி முறைப்படி 2018ல் அதை வாங்கிய புதிய நிறுவனத்தில் கையில் ஒப்படைக்கப்படும்.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Read in Tamil: Ducati on Sale Royal Enfield Closes to make a Binding. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X