டுகாட்டியின் புதிய ஸ்கிராம்பிளர் கஃபே ரேஸர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

டுகாட்டி தயாரித்திருக்கும் ஸ்கிராம்பிளர் கஃபே ரேசர் மாடல் மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

பைக் பிரியர்களின் தற்போதைய குறிக்கோளாக இருக்கும், இந்த பைக்கை பற்றிய சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

டுகாட்டி ஸ்கிராம்பிளர் கஃபே ரேஸர் பைக் விற்பனைக்கு வந்தது..!

டுகாட்டி இந்தியா நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் பைக்கை இந்தியாவில் ரூ. 9,32,000 டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

டுகாட்டி ஸ்கிராம்பிளர் கஃபே ரேஸர் பைக் விற்பனைக்கு வந்தது..!

முன்னர் டுகாட்டி வெளியிட்ட ஸ்கிராம்பிளர் மாடலை தழுவி இந்த புதிய மாடலுக்கான வடிவமைப்பு பணிகள் மற்றும் உபகரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி ஸ்கிராம்பிளர் கஃபே ரேஸர் பைக் விற்பனைக்கு வந்தது..!

ஸ்கிராம்பிளர் மாடல்களில் ஸ்கிராம்பிளர் ஐகான், ஸ்கிராம்பிளர் கிளாசிக், ஸ்கிராம்பிளர் டெசர்ட் மற்றும் ஸ்லைட் ஸ்கிராம்பிளர் என 3 மாடல்கள் விற்பனை செயப்படுகிறது.

டுகாட்டி ஸ்கிராம்பிளர் கஃபே ரேஸர் பைக் விற்பனைக்கு வந்தது..!

இந்த வரிசையில் 4வது மாடலாக வெளிவந்துள்ள ஸ்கிராம்பிளர் கஃபே ரேசர் பைக்கில் 8.3சிசி எல்-ட்வின் எஞ்சின் உள்ளது. இது 73 பிஎச்பி பவர் மற்றும் 67 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

டுகாட்டி ஸ்கிராம்பிளர் கஃபே ரேஸர் பைக் விற்பனைக்கு வந்தது..!

சாதரண டுகாட்டியின் ஸ்கிராம்பிளர் வடிவமைப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தாலும், பைக்கின் ஹேண்டில் பார், பார்-எண்ட் மிரர், டெர்மிக்னானி எக்சாஸ்ட், டூயல் டெயில்பைப், கருப்பு அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் கவர் போன்ற புதிய வடிவமைப்பு முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

டுகாட்டி ஸ்கிராம்பிளர் கஃபே ரேஸர் பைக் விற்பனைக்கு வந்தது..!

பாதுகாப்பு வழிமுறைகளில் ஏபிஎஸ் மற்றும் பிரெஷர் சென்ஸார் கொண்ட பிரம்போ பிரேக்கிங் அமைப்பு, முன்பக்கம் ரேடியல்-டைப் ஸ்போர்ட்பைக் பிரேக்கிங் வழங்கும் முன்பக்க பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

டுகாட்டி ஸ்கிராம்பிளர் கஃபே ரேஸர் பைக் விற்பனைக்கு வந்தது..!

மேலும் பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் வெளிவரும் டுகாட்டி ஸ்கிராம்பிளர் கஃபே ரேசர் மாடல் டெல்லி, மும்பை, பெங்களூரு, பூனே, அகமாதபாத் மற்றும் கொச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள டீலர்கள் மூலம்ம் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Read in Tamil: Ducati Scrambler Cafe Racer Bike Launched in India. Click for the Details...
Story first published: Saturday, August 5, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark