புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய சூப்பர்பைக் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

சூப்பர்ஸ்போர்ட் மற்றும் சூப்பர்ஸ்போர்ட் எஸ் ஆகிய இரு மாடல்களில் வந்துள்ளது. சொகுசான பயணத்தை வழங்கும் அதிசெயல்திறன் மிக்க மாடலாக புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நகர்ப்புற சாலைகள், நெடுஞ்சாலைகள் என இரண்டு சாலை நிலைகளிலும் சிறப்பானதாக இருக்கும்.

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக்கில் 937சிசி ட்ரெஸ்டேட்ரா 11 எல்- ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 93 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின்தான் டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 939 மற்றும் மல்டிஸ்ட்ரேடா 950 ஆகிய மாடல்களிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த செயல்திறன் மிக்க சூப்பர் பைக் பல விசேஷ தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. ரைடு பை ஒயட் சிஸ்டம், ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என மூன்றுவிதமான நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதிகள் உள்ளன.

Recommended Video - Watch Now!
Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பாஷ் 9எம்பி ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டுகாட்டி டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இந்த பைக்கின் பாதுகாப்புக்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சங்களாக கூறலாம். இரண்டு மாடல்களிலுமே சிங்கிள் சைடு அலுமினிய ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 320மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 245மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சூப்பர்ஸ்போர்ட் எஸ் மாடலில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஒலின்ஸ் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ரேஸ் பைக் மாடல்களில் கொடுக்கப்படும் டுகாட்டி குயிக் ஷிஃப்ட் வசதியும் உண்டு. இதன்மூலமாக, விரைவாக கியர் மாற்றம் செய்ய முடியும். இந்த பைக்கிற்கு ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளை டுகாட்டி நிறுவனம் வழங்குகிறது.

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் மாடல் ரூ.12.08 லட்சம் விலையிலும், சூப்பர்ஸ்போர்ட் எஸ் மாடல் ரூ.13.39 லட்சம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடுமுழுவதும் உள்ள 7 டுகாட்டி ஷோரூம்களில் இந்த பைக்குகளுக்கான முன்பதிவு செய்து வாங்கலாம்.

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் மற்றும் சூப்பர்ஸ்போர்ட் எஸ் மாடல்கள் கவாஸாகி நின்ஜா 1000, சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் - எஸ் 1000எஃப் ஆகிய சூப்பர் பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Italian superbike manufacturer Ducati has launched the SuperSport and SuperSport S in India with a price tag of Rs 12.08 lakh and 13.39 lakh respectively. All prices are ex-showroom (India).
Story first published: Tuesday, September 26, 2017, 10:28 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark