ராயல் என்ஃபீல்டு மோட்டார்சக்கிள்கள் வாங்க இதுவே சரியான நேரம்: விலை குறைப்பு அறிவிப்பு..!!

Written By:

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலாவதை முன்னிட்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை குறைத்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு..!!

வரும் ஜூலை 1ம் தேதி 2017 முதல் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நாடுமுழுவதும் அமலாக உள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட ஆட்டோமொபைல் ரகங்கள் விலை குறைய உள்ளது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு..!!

முன்னதாக பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஜாஜ் ஆட்டோ முதல் இருசக்கர வாகன நிறுவனமாக விலை குறைப்பை அறிவித்தது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு..!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் அனைத்து மாடல்களின் விலையிலும் ரூ.4,500 வரை விலை குறைப்பை அறிவித்திருந்தது, அப்போதே வேறு சில இருசக்கர வாகன நிறுவனங்களும் இதே போன்ற அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு..!!

இதனைத்தொடர்ந்து தற்போது சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு, இரண்டாவது இருசக்கர வாகன நிறுவனமாக விலை குறைப்பு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு..!!

ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான விலையில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எந்த மாடலுக்கு எவ்வளவு விலை குறைப்பு என்பது குறித்த சரியான தகவலை வெளியிடவில்லை.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு..!!

எனினும் இந்த விலை குறைப்பின்படி மாடல்களை பொருத்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வித்தியாசம் இருக்கலாம்.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு..!!

விலை குறைப்பு இன்று முதல் (ஜூன் 17, 2017) அமலாவதாக குறிப்பிட்டுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், 350 சிசி க்கு மேற்பட்ட திறன் கொண்ட மாடல்கள் விலையை மட்டும் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு..!!

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 350சிசி க்கு அதிகமான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு நடப்பு வரியில் இருந்து 3% சதம் அதிகரிக்கப்பட்டு 31% சதவீதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு..!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு, கிளாசிக், காண்டினெண்டல் ஜிடி, புல்லட் மற்றும் ஹிமாலயன் ஆகிய மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about Royal enfield announces price cut on gst effect.
Story first published: Saturday, June 17, 2017, 15:53 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark