ரூ.11.99 லட்சம் விலையில் 2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2018 சாஃப்டெயில் ரேஞ்ச் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் ரூ.11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் வெளியிட்டுள்ளது.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 சாஃப்டெயில் ரேஞ்ச் மாடலில் ஃபோட் பாய், ஃபேட் பாப், ஸ்டீரிட் பாப் மற்றும் பாரம்பரிய சாஃப்டெயில் கிளாசிக் போன்ற பைக்குகளும் வெளியிடப்படுகின்றன.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த பைக்குகள் அனைத்தும் முற்றிலும் புதிய மில்வாக்கீ 8 எஞ்சின்கள் மற்றும் புதிய கேஸிஸ் அமைப்பை பெற்றிருக்கும் என ஹார்லி டேவிட்சன் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!
2018 ஹார்லி- டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் விலை
ஸ்டீரிட் பாப் ரூ. 11.99 லட்சம்
ஃபேட் பாப் ரூ. 13.99 லட்சம்
ஃபேட் பாய் ரூ. 17.49 லட்சம்
ஹெரிடேஜ் சாஃப்டெயில் கிளாசிக் ரூ. 18.99 லட்சம்
2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஃபேட் பாப் மற்றும் ஸ்டீரிட் பாப் பைக்குகளில் மில்வாக்கீ 8 107 எஞ்சின் உள்ளது, ஹெரிடேஜ் சாஃப்டெயில் மாடல் மில்வாக்கீ 8 114 எஞ்சினை பெற்றுள்ளது.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்கில் புதிய முன்பக்க சன்பென்ஷன் மற்றும் மாற்றியமைக்கப்படக்கூடிய ரியர் மோனோ ஷாக், டூயல் பிளண்டிங் கொண்ட முன்பக்க சன்பென்ஷன் போன்ற தேவைகள் அமைந்துள்ளன.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

நீண்ட தூர பயணங்களுக்காக டூரிங் பைக் என்பதால் ஹார்லி டேவிட்சன் இத்தகைய புதிய தொழில்நுட்பங்களை சாஃப்டெயில் ரேஞ்ச் மாடலுக்கு வழங்கியுள்ளது.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

குறைந்த அதிர்வு, சிறந்த ரைடு மற்றும் சிறந்த கையாளும் திறனை தரக்கூடிய மிகவும் மேம்படுத்தப்பட்ட முற்றிலும் புதிய கேஸிஸ் இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

எல்.இ.டி முகப்பு விளக்குகள் உட்பட சில குறைந்த அளவிலான மாற்றங்களை இந்த பைக் மாடல் பெற்றிருக்கிறது. மேலும் ஃபேட் பாப் மாடல் பைக்கில் பெருமளவிலான மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

குறிப்பாக ஃபேட் பாப் பைக்கின் முன்பக்க தோற்றம், தனித்துவம் பெற்ற கிடைமட்ட அளவிலான எல்.இ.டி விளக்குகள் பரவசம் கொள்ள செய்கின்றன.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 ஸ்டீரிட் பாப் டிஜிட்டல் கட்டமைப்பில் பல்வேறு புதிய தேவைகளை பெற்றுள்ளது. அதன்படி கருப்பு நிற மயமான இந்த பைக்கில் இருக்கும் புதிய புகைபோக்கி குழாய் அசரடிக்கிறது.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

பெரிய கட்டமைப்புகளை இந்த வெர்ஷனில் ஸ்டீரிட் பாப் கொண்டு இருந்தாலும் முந்தைய மாடலை விட இது 8 கிலோ எடை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய் பைக்கில் புதிய சேஸில் மிகவும் கெத்தாகவும், அதே சமயத்தில் இலகுவாகவும் உள்ளது.

அதை மேலும் மேம்படுத்திக்காட்ட பைக் மிகவும் நவீனமாகவும், ஸ்டைலாகவும் உள்ளது.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஃபேட் பாய் பைக்குகளுக்கே உரித்தான எல்.இ.டி முன்பக்க விளக்குகள், திடமான லேக்ஸ்டர் சக்கரங்கள், 18.9 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிவாயு டேங்க் ஆகியவை உள்ளன.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

மிகவும் பாதுகாப்பான, வாட்டர்ப்ரூஃப் கொண்ட, அதிக தூரம் செல்லும் டூரிங்கிற்கான திறனுடன் 2018 ஹெரிடேஜ் சாஃப்டெயில் கிளாசிக் பைக்கை ஹார்லி டேவிட்சன் தயாரித்துள்ளது.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

அகற்றக்கூடிய வசதிப்பெற்ற விண்டுஸ்கீரின், அதிக சஸ்பென்ஷனை தரும் நுட்பம் அதற்கு ஏற்ற கோடு தாங்கு திறன் போன்றவை பைக்கில் கவனமீர்க்கிறது.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 சாஃப்டெயில் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள மில்வாக்கீ 8 எஞ்சின் லிக்குவிடு கூல்டு வசதி பெற்றது. 1750சிசி திறன் பெற்ற இந்த பைக்கில் மூலம் 150 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

முந்தைய எஞ்சின் மாடலை விட இந்த புதிய வெர்ஷனுக்கு எஞ்சினில் இருந்து பைக்கின் கியருக்கு ஆற்றலை கடத்தும் உந்துதல் சக்தி அதிகளவில் இருக்கும் என்கிறது ஹார்லி டேவிட்சன்.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய மில்வாக்கீ 8 எஞ்சினை பொருத்தி உள்ளதன் மூலம் ஹார்லி டேவிட்சன் 2018 சாப்டெயில் ரேஞ்ச் மாடல்களில் ஒரு தனித்த்துவத்தை கூட்டியிருக்கிறது என்றே சொல்லலாம்.

2018 ஹார்லி-டேவிட்சன் சாஃப்டெயில் ரேஞ்ச் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய கேஸிஸ், மேம்படுத்தப்பட்ட சன்பென்ஷன் செட்-அப் போன்றவை வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய ரக பைக்கை சிறந்த ரைடிங் தரத்திற்கு கொண்டு செல்லும்.

English summary
Read in Tamil: 2018 Harley-Davidson Softail Range Launched In India; Prices Start At Rs 11.99 Lakh. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark