ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் உலகளவில் பைக் பிரியர்களின் கனவு வாகனமாக இருந்து வருகிறது. இந்தியாவிலும் இந்த பைக்குகளுக்கு பிரத்யேக ரசிகர் வட்டமும், பைக் குழுவும் இருக்கிறது. தற்போது இந்திய ரசிகர்களை குஷிப்படுத்த புதிய 'ஸ்ட்ரீட் ராட்750' பைக்கை ஹார்லி டேவிட்சன் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஹார்லி டேவிட்சனின் ஸ்ட்ரீட் 750 பைக் இந்தியாவில் வெற்றிகமான மாடகாக விளங்கி வருகிறது. இதன் வழித்தோன்றலாகவே இந்த புதிய ‘ஸ்ட்ரீட் ராட்750' பைக் அமைந்துள்ளது. ஆயினும் முந்தயை மாடலை விட திறனிலும், தோற்றத்திலும் மிக மேம்பட்டதாக இது இருக்கிறது.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் பிரத்யேகமாக இளைஞர்களை குறி வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்போர்டி லுக் கவர்ந்திலுக்கும் வகையில் உள்ளது. புதுமையாக நேரான ஹேண்டில்பார் இதற்கு கொடுக்கப்பட்டுள்ளது, இது ஓட்டுவதற்கு சொகுசாக அமைந்துள்ளது. மேலும், மடக்கும் வகையிலான ரியர் மிர்ரர் இதில் உள்ளது.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

பொதுவாகவே ஹார்லி பைக்குகள் ஸ்டைலிஷ் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என இரண்டும் கலந்த கலவையாகவே இருக்கும். இந்த புதிய பைக்கும் அதற்கு விதிவிலக்கல்ல. பல்வேறு சிறம்பம்சங்கள் இதில் உள்ளது. அதனை விவரமாக தெரிந்துகொள்வோம்.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

நடுத்தர ஸ்போர்ட்ஸ் பைக்கான ஸ்ட்ரீட் ராட் பைக்கில் முன்பக்க கறுப்பு வண்ண ஒற்றை கவசத்துக்கு பின்னால், பிரம்மாண்ட கிளியர் லென்ஸ் ஹெட்லைட் இடம் பிடித்திருக்கிறது. இது முன்பக்க தோற்றத்தை ட்ரெண்டியாக ஆக்குகிறது. இதன் சீட் உயரம் 765மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

சீட் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஓட்டுநருக்கு சாலையில் அகலமான பார்வைத் திறன் கிடைக்கும். மேலும் இந்த சீட் மிகவும் சொகுசாகவும், பாதுகாப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைதூர பயணத்திலும் அலுப்பு ஏற்படாத வண்ணம் இது அமைந்துள்ளது.

இஞ்சின்

இஞ்சின்

பைக்கின் சிறப்புகளை பற்றி தெரிந்துகொள்ளும் முன்பாக இதன் ஆற்றல் மிகுந்த இஞ்சினைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக்கில் 749சிசி லிக்விட் கூல்டு இஞ்சின் உள்ளது, 8 வால்வுகள் கொண்ட இது பிரத்யேக 60 டிகிரி வி-டிவின் ஹை அவுட்புட் ரெவொல்யூசன் இஞ்சின் ஆகும். முந்தைய ஸ்ட்ரீட்750 பைக்கை காட்டிலும் 11% கூடுதல் ஆற்றலையும், 5 % கூடுதல் டார்க்கையும் இந்த பைக் வெளிப்படுத்தும்.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

8,250 ஆர்பிஎம்-ல் இது அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும், 4,000 ஆர்பிஎம்-ல் 62 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 4,000 - 5,000 ஆர்பிஎம்-ல் சிறந்த ஆற்றலை இது வெளிப்படுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

இந்திய சாலைகளை கருத்தில் கொண்டு, இந்த பைக்கிங் ஸ்விங் ஆர்ம் முந்தைய ஸ்ட்ரீட்750-ஐ விட அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மோசமான சாலைகளில் கூட சிறந்த பயணத்தை இது வழங்குகிறது.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

புதிய டிசைனில் முன்புறமும், பின்புறமும் 17 இஞ்ச் அலாய் வீல்கள் உள்ளது. இதில் முன்பக்கம் 120/70, பின்பக்கம் 160/60 எம்ஆர்எஃப் டயர்கள் உள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 205மிமீ ஆக உள்ளது.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக இல்லாமல் ஸ்டாண்டர்ட் அமைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் பிஸ்டன் காலிபர்கள் கொண்ட இந்த பைக்கில் இருபக்கமும் 300மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

இப்புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் ‘விவிட் பிளாக்', ‘சார்கோல் டெனிம்'மற்றும் ‘ஆலிவ் கோல்டு' ஆகிய புதுமையான வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த பைக்குகளுக்கான புக்கிங்குகளை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தொடங்கிவிட்டது.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

ஸ்ட்ரீட் ராட்750 பைக்கில் ஃபோர்ஜுடு பிரேக் மற்றும் கியர் லீவர்கள், அலுமினியம் ரியர் கால்மிதி, ட்வின் ஷாக் அப்சார்பர்கள் என சிறப்புகள் கொண்ட இந்த ஸ்ட்ரீட் 750 பைக்கை அப்பர் மிடில் கிளாஸ் மக்களை டார்க்கெட் செய்து விற்பனைக்கு கொண்டுவந்திருக்கிறது ஹார்லி.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

இந்த புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் ரூ.5.86 லட்சம் ( டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கும். முந்தைய ஸ்ட்ரீட்750 மோட்டார் சைக்கிளை விடவும் 80 ஆயிரம் ரூபாய் கூடுதல் விலை கொண்டதாக இந்த பைக் உள்ளது.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

ஹார்லி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக ஸ்ட்ரீட் 750 பைக்குகள் தான் தற்போது திகழ்ந்து வருகின்றது. அந்நிறுவனத்தின் மொத்த பைக் விற்பனையில் 60% விற்பனையாகி வரும் ஸ்ட்ரீட்750 மாடல் தான் இதுவரையில் முதலிடத்தில் உள்ளன.

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் அறிமுகம்

தற்போது இந்தியாவில் அறிமுகாகியுள்ள ஸ்ட்ரீட் ராட்750 பைக் விற்பனையில் மேலும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டெஸ்ட் டிரைவிங் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

விஜய் மல்லையாவின் ஃபார்முலா-1 காரை காய்ச்சி எடுக்கும் நெட்டிசன்கள்!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கை கலங்கடித்த கார் பந்தய வீரர்

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

இனி ஆதார் எண் இல்லாமல் வாகனங்களை பதிவு செய்ய முடியாது!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்:

English summary
Harley-Davidson Street Rod 750 launched in India. The Harley-Davidson Street Rod 750 gets more power and better hardware than the Street 750 and is around Rs. 80,000 expensive than the latter

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark