புதிய 200சிசி ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளை உருவாக்கி வரும் ஹீரோ!

Written By:

இருசக்கர வாகன விற்பனையில் நாட்டின் முதன்மையான நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் புதிய ரக பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, தற்போது புதிய ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய 200சிசி ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளை உருவாக்கி வரும் ஹீரோ!

சாதாரண சாலை மற்றும் கரடுமுரடான சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட இம்பல்ஸ் என்ற பைக் மாடலை ஹீரோ விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில், விற்பனை சிறப்பாக இல்லாததால், அந்த மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுத்தப்பட்டது.

புதிய 200சிசி ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளை உருவாக்கி வரும் ஹீரோ!

இந்த நிலையில், புதிய 200சிசி திறன் கொண்ட முழுமையான ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளை ஹீரோ உருவாக்கி வருவதாக எக்கானமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Recommended Video
Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய 200சிசி ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளை உருவாக்கி வரும் ஹீரோ!

தற்போது இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்கள் விலை அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், பட்ஜெட் விலையிலான புதிய ஆஃப்ரோடு மாடலை களமிறக்கி மார்க்கெட்டை பிடிப்பதற்கு ஹீரோ நிறுவனம் திட்டம் போட்டுள்ளது.

புதிய 200சிசி ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளை உருவாக்கி வரும் ஹீரோ!

புதிய ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளில் 18 பிஎச்பி முதல் 20 பிஎச்பி வரையிலான சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 200சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

புதிய 200சிசி ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளை உருவாக்கி வரும் ஹீரோ!

அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ் மற்றும் லாங் டிராவல் சஸ்பென்ஷன் அமைப்புடன் புதிய ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள் வர இருக்கிறது. வலிமையான கட்டமைப்பும் இந்த மோட்டார்சைக்கிளுக்கு சிறப்பு சேர்க்கும்.

புதிய 200சிசி ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளை உருவாக்கி வரும் ஹீரோ!

பட்ஜெட் விலை பிரிமியம் மோட்டார்சைக்கில் செக்மென்ட்டில் ஹீரோ நிறுவனம் வெறும் 3.52 சதவீத மார்க்கெட் பங்களிப்பை மட்டுமே வைத்திருக்கிறது. ஆனால், போட்டி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ 30 சதவீத அளவுக்கு இந்த செக்மெனட்டில் மார்க்கெட் பங்களிப்பை வைத்திருக்கிறது.

புதிய 200சிசி ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளை உருவாக்கி வரும் ஹீரோ!

எனவே, 200சிசி ரகத்தில் பல புதிய மாடல்களை வெவ்வேறு ரகத்தில் அறிமுகப்படுத்துவதே ஹீரோ நிறுவனத்தின் திட்டம். புதிய 200சிசி ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள் தவிர்த்து, புதிய 200சிசி எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலையும், புதிய நேக்கட் ஸ்டைல் மாடலையும் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஹீரோ நிறுவனம்.

English summary
Economic Times reports that Hero MotoCorp is also working on a 200cc off-road motorcycle. Apart from that, the company will also introduce the Xtreme 200S by the end of current fiscal.
Story first published: Saturday, August 26, 2017, 11:56 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos