ரூ.55,000 விலையில் புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் ஐ3எஸ் அறிமுகம்

ஹீரோ மோட்டார் கார்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் பற்றி தற்போது காணலாம்.

By Super Admin

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப், தனது 2017 சூப்பர் ஸ்பிளெண்டர் மாடலை தற்போது வெளியிட்டுள்ளது.

ரூ. 55,000 விலையில் புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் ஐ3எஸ் அறிமுகம்

புதிதாக அறிமுகமாகியுள்ள சூப்பர் ஸ்பிளெண்டரில் காற்றினால் குளிர்விக்கக்கூடிய 127.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 9 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த சூப்பர் ஸ்பிளெண்டரில் புதிதாக ஐ3எஸ் என்ற தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

ஐ3எஸ் எவ்வாறு வேலை செய்கிறது?

ஐ3எஸ் எவ்வாறு வேலை செய்கிறது?

போக்குவரத்து சிக்னல் போன்ற இடங்களில் 5 நொடிகளுக்கும் மேலாக பைக் இயக்கப்படாமல் நிற்கின்ற போது எஞ்சின் தானாகவே ஆஃப் ஆகிவிடும். பின் மீண்டும் கிளட்ச்சை இயக்கும் போது எஞ்சின் ஆன் ஆகி விடும். இந்த ஸ்மார்ட் சிஸ்டம் தேவைப்படாத போது பைக் கைப்பிடியின் வலது புறம் உள்ள அதற்குரிய ஸ்விட்சை ஆஃப் செய்தும் கொள்ளலாம்.

ரூ. 55,000 விலையில் புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் ஐ3எஸ் அறிமுகம்

பைக்கின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை, எனினும் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் இடம்பெற்றுள்ளது. முன்பைவிட கூடுதல் கவர்ச்சிமிக்கதாக உள்ளது.

ஹீரோவின் புதிய 2017 சூப்பர் ஸ்பிளெண்டர் ஐ3எஸ் அறிமுகம்

இந்த பைக் 1,995 மிமீ உயரமும், 735 மிமீ அகலமும், 1,095 மிமீ உயரமும் கொண்டது, கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மிமீ ஆக உள்ளது, இதன் எடை 121 கிலோவாகும். ஊதா, அடர் சிவப்பு, கிராஃபைட் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு கலந்த கருப்பு ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கிறது.

ரூ. 55,000 விலையில் புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் ஐ3எஸ் அறிமுகம்

ரூ. 55,275 என்ற எக்ஸ் ஷோரும் (டெல்லி) விலையில் புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் கிடைக்கிறது. சமீபத்தில் ஹீரோ நிறுவனத்தால் 97.2 சிசி கொண்ட பேஷன் ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் படங்கள்:

Most Read Articles
English summary
The 2017 Hero Super Splendor i3S measures 1,995 mm in length, 735 mm in width and 1,095 mm in height.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X